இரைப்பை வாதத்தினால் அவதியா? இதோ எளிய தீர்வு -
இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்காத போது இரைப்பை வாதம் ஏற்படுகிறது.
மேல்வயிற்றில் வலி, சர்க்கரையின் அளவு மாறுபடுதல், பசியின்மை.வயிறு உப்புசம், எடை குறைதல் என்பன இவற்றின் அறிகுறிகள் ஆகும்.
இதில் இருந்து எளிதில் விடுபட கீழ் குறிப்பிடப்பட்டுள்ள முறைகளை செய்தாலே போதும். தற்போது அவற்றை பார்ப்போம்.
- இரு ஸ்பூன் அளவுள்ள சோற்றுக் கத்தாழையை நான் கைந்து முறை நன்கு கழுவி, அதனுடன் ஒரு கப் நீர் அல்லது ஆரஞ்சு சாறுடன் நன்றாக கலந்து குடிக்கவும். இதை வெறும் வயிற்றில் அல்லது உணவுக்கு முன் குடிக்கலாம்.
- ஒரு டம்ளர் நீரில், ஒரு ஸ்பூன் அளவு ஆப்பிள் சைடர் வினிகர் கலந்து குடிக்கவும்.சாப்பிடுவதற்கு 20 நிமிடங்கள் முன்னர் இதை குடித்தால் அதிக பயன் தரும்.
- இரைப்பை வாதத்தால் பாதிக்கப்படுபவர்கள், தொடர்ந்து விட்டமின் D யை எடுத்துக் கொள்ளும்போது, ஜீரண உறுப்புக்கள் சீர் அடைவதாக தெரிய வந்துள்ளது. அதிகாலையில் வரும் சூரிய ஒளியில் பதினைந்து நிமிடங்கள் நின்றால் போதுமானது. மேலும் விட்டமின் D நிறைந்த உணவுகளும் மாத்திரைகளும் உட்கொள்ள வேண்டும்.
- ஆழமான மூச்சுப் பயிற்சி செய்யும் போது வேகஸ் நரம்பு தூண்டப்படுகிறது.அது ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது.
- ஒரு ஸ்பூன் தேங்காய் என்ணெயை கால் கப் வெதுவெதுப்பான தண்ணீரில் சேர்த்து குடிக்கவும். அல்லது தேநீரில் கலந்து குடிப்பதும் நலம். பசியை தூண்டவல்லது.
- இரைப்பை வாதத்தில் என்சைம்கள் தூண்டினால்தான் மற்ற உறுப்புக்கள் வேலை செய்யும். இஞ்சி ஜீரண மண்டலத்தை தூண்டி, பசியை உருவாக்குவதில் கிங் என்றே சொல்லலாம். உடலில் என்சைம்கள் சீக்கிரம் சுரக்க வழிவகுக்கிறது.
- காய்ந்த மிளகுக் கீரை ஒரு ஸ்பூன் எடுத்து ஒரு கப் நீரில் போட்டு கொதிக்க வைத்து அதை வடிகட்டி குடிக்கலாம்.
இரைப்பை வாதத்தினால் அவதியா? இதோ எளிய தீர்வு -
Reviewed by Author
on
April 25, 2019
Rating:
Reviewed by Author
on
April 25, 2019
Rating:


No comments:
Post a Comment