அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் ஆயரை பயங்கரவாதி என கூறிய முக்கிய அமைச்சர்! இன்று நடப்பவைக்கும் தொடர்பு உள்ளதா? -


நாடாளுமன்ற சபை இன்று எதற்காக கூடியது என்று அர்த்தம் தெரியாமல் நான் பிழை செய்யவில்லை, மற்றவர்தான் பிழை செய்தார் என சாட்டு போக்குகளை கூறி சபையை திசை திருப்ப செய்ய பலர் முனைகின்றனர்.
எனவே இவற்றை விட்டு விட்டு உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும். ஜனாதிபதியாவதற்காக, பிரதமராவதற்காக குற்றவாளிகளை தப்பிக்க செய்கிற மோசமான அரசியலை யாரும் முன்னெடுக்க வேண்டாம்.

இங்கிருக்கின்ற சில அரசியில் தலைவர்கள் இந்த விவகாரங்களோடு தொடர்புபட்டு இருக்கிறார்கள். எனவே அவர்கள் தங்களை நல்லவர்கள் போல காண்பிக்க நிகைக்கிறார்கள். இவர்கள் சட்டத்தின் முன் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் ராயப்பு ஜேசப் ஆண்டகையை பயங்கரவாதி என அடையாப்படுத்தியவர்கள் இன்று இதற்கு என்ன கூறுகிறார்கள்.

இவ்வாறான நிலையில் கொழும்பில் குண்டு தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கியது யார்? அத்துடன் இந்த தாக்குதல் நடத்தியவர்கள் மீது விசாரணை நடத்த மாட்டார்கள்.
மேலும், தற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளை வளர்த்தது முஸ்லிம் அரசியில்வாதிகள் தான் என கூற இந்த சபையில் யாருக்கும் தைரியம் இல்லை.
மன்னார் ஆயரை பயங்கரவாதி என கூறிய முக்கிய அமைச்சர்! இன்று நடப்பவைக்கும் தொடர்பு உள்ளதா? - Reviewed by Author on April 25, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.