வன்னி பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தானின் நிதி ஒதுக்கீட்டில் மீன்பிடி வலைகள் வழங்கி வைப்பு
மன்னார், பேசாலைஇ பள்ளிமுனைஇ எருக்கலம்பிட்டிஇ தலைமன்னார் பகுதி
மீனவர்களின் கடற்றொழிலை ஊக்குவித்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் உயரிய நோக்கத்துடன் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மீள் குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி முன்னாள் பிரதி அமைச்சருமான கெளரவ காதர் மஸ்தான் அவர்களின் பதினெட்டு இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டின் மூலம் மீன்பிடி வலைகள் கடந்த சனிக்கிழமை (30) வழங்கி வைக்கப்பட்டன.
மன்னார் கடற்றொழில் அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே கெளரவ காதர் மஸ்தான் அவர்களால் மேற்படி வலைகள் வழங்கி வைக்கப்பட்டன. இங்கு உரையாற்றிய வன்னி பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான்இ
அலையோடும்இ துயரோடும் வாழ்வினையோட்டும் மீனவர்கள் எதிநோக்கும் வாழ்வாதார இடர்களை நாம் அறிவோம்.
அந்த துயரிலிருந்து மீட்டெடுக்கும் மகத்தான கடமை எமக்குண்டு. இன்று வழங்கப்படும் வலைத்தொகுதிகள் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் உயரிய நோக்கத்துடன் வழங்கப்படுகின்றன எனக் குறிப்பிட்டார்.
இந் நிகழ்வில் கடற்றொழில் உதவிப் பதிப்பாளர் சாகர விக்ரமசிங்க,மன்னார்
ஸ்ரீ.ல.சுதந்திர கட்சி தொகுதி அமைப்பாளர் திரு.குரூஸ்,மாந்தை மேற்கு
பிரதேச சபை பிரதித் தவிசாளர் ஜனாப். எம்.எச்.தெளபீக், மன்னார் நகர சபை
உறுப்பினர் திரு.ராஜன், பள்ளிமுனை சுதந்திர கட்சியின் உறுப்பினர்
திரு.நோபட்,கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அவர்களின்
இணைப்பாளர் ஜனாப்.தர்ஷீன் மன்னார் பிரதேச சபை உறுப்பினர் ஜனாப்.சாபிர்
உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Reviewed by Author
on
April 03, 2019
Rating:

No comments:
Post a Comment