அனைத்து அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை! கல்வி அமைச்சு அறிவிப்பு -
அரச பாடசாலைகள் அனைத்துக்கும் முதலாம் தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அரச அங்கீகாரத்துடன் இயங்குகின்ற சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளின் முதலாவது தவணை எதிர்வரும் வௌ்ளிக்கிழமை நிறைவடையவுள்ளது
இந்நிலையில் அனைத்து அரச பாடசாலைகளுக்கும் 5ம் திகதி விடுமுறை வழங்கப்படவுள்ளது.
முதலாம் தவணை விடுமுறையின் பின்னர் மீண்டும் எதிர்வரும் 22ம் திகதி இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைக்காக ஆரம்பிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, முஸ்லிம் பாடசாலைகள் முதலாம் தவணை விடுமுறைக்காக எதிர்வரும் 11ம் திகதி மூடப்பட்டு 17ம் திகதி மீண்டும் இரண்டாம் தகவணைக்காக திறக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அனைத்து அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை! கல்வி அமைச்சு அறிவிப்பு -
Reviewed by Author
on
April 03, 2019
Rating:

No comments:
Post a Comment