பொலிஸார் எச்சரிக்கை-அடையாள அட்டை இல்லை என்றால் கைதுசெய்யப்படுவீர்கள்!
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினை அடுத்து நாடு முழுவதும் பலத்த பாதுகாப்புக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முகமாக அனைத்துப் பகுதிகளிலும் தேடுதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இன்றைய தினம் ஹட்டன் நகரில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கபட்டுள்ளதோடு ஹட்டன் பொலிஸார் இராணுவத்தினரும் மோப்ப நாய்களை கொண்டு ஹட்டன் பிரதான பேருந்து தரிப்பிடம், பேருந்துகள், வர்த்தக நிலையங்கள் போன்றவற்றை சோதனை நடவடிக்கையியில் ஈடுபட்டனர்.
நாட்டின் அசாதாரண சூழ்நிலையினால், ஹட்டன் மற்றும் பொகவந்தலாவ நுவரெலியா தலவாகலை போன்ற பல நகரங்களுக்கு செல்லும் பொதுமக்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் வகையில் அடையாள அட்டையினை தம் வசம் வைத்துகொள்ள வேண்டும்.
பொலிஸாரின் பரிசோதனையின் போது அடையாள அட்டை இல்லாமல் இருப்பவர்கள் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யபடவார்கள் என பொலிஸார் பொது மக்களை எச்சரித்துள்ளனர்.
இதேவேளை மக்கள் வசிக்கும் பிரதேசங்களில் சந்தேகத்திற்கு இடமான வாகனங்கள் நிறுத்தி வைக்கபட்டிருந்தால் அருகாமையில் இருக்கின்ற பொலிஸ் நிலையங்களுக்கு உடனடியாக அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
பொலிஸார் எச்சரிக்கை-அடையாள அட்டை இல்லை என்றால் கைதுசெய்யப்படுவீர்கள்!
Reviewed by Author
on
April 26, 2019
Rating:

No comments:
Post a Comment