ஹக்கீமின் கூற்றை தமிழர்கள் வன்மையாக கண்டிப்பதாக ஸ்ரீதரன் தெரிவிப்பு -
தமிழர்கள் கொல்லப்பட்டதை மறைத்து தனது அமைச்சு பதவிக்காக இவ்வாறு நடந்துகொள்ள வேண்டாம் எனவும் சுட்டிக்காட்டினார்.
இலங்கைக்கு சர்வதேச நீதிபதிகள் வரவேண்டிய அவசியம் இல்லை, இலங்கையின் நீதிமன்றம் ஒன்று போதுமானது என அமைச்சர் ரவூப் ஹக்கீம் இரண்டு நாட்களுக்கு முன்னர் தெரிவித்துள்ளார்.
அல்லாஹ்வை வணங்கும் புனித மார்க்கத்தை பின்பற்றும் ஒரு மனிதர் இங்கு பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டபோது ஒரு வார்த்தை கூட பேசாத மனிதர் ரவூப் ஹக்கீம். குழந்தைகள் கொல்லப்பட்டபோது பலர் அழுதே உயிர் நீத்த போது ரசித்துக்கொண்டிருந்தவர் ஹகீம். யுத்தம் முடிந்த பின்னர் 2011 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்திற்கு முன்னால், இங்கு யுத்தத்தில் யாரும் கொல்லப்படவில்லை என அரசாங்கத்திற்காக பிரசாரம் செய்தார். இப்போது மீண்டும் அதே பாணியில் கருத்துக்களை செய்து வருகின்றனர்.
ஆகவே இவரது கருத்துக்களை தமிழர் நாம் வன்மையாக கண்டிக்கின்றோம் எனவும் குறிப்பிட்டார்.
- Virakesari-
ஹக்கீமின் கூற்றை தமிழர்கள் வன்மையாக கண்டிப்பதாக ஸ்ரீதரன் தெரிவிப்பு -
Reviewed by Author
on
April 04, 2019
Rating:

No comments:
Post a Comment