யுத்தம் நிறைவடைந்து பத்து வருடம்! இது ஒரு தீவிர பிரச்சினை
உள்நாட்டு பொறிமுறையின் கீழ் பொறுப்புக்கூறலை நிறைவேற்ற அரசாங்கம் இதுவரை என்ன செய்துள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,
இறுதி யுத்தம் நிறைவடைந்து பத்தாண்டுகளாகின்ற போதிலும் பொறுப்புக்கூறலை நிறைவேற்ற இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட்டதாக இல்லை. பொறுப்புக்கூறலை நிறைவேற்றுவது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் மற்றும் தொடர்ந்து வருகின்றன.
இத்தருணத்தில் அரசாங்கத்தை ஒன்று கேட்க விரும்புகிறேன். உள்நாட்டு பொறிமுறையின் கீழ் பொறுப்புக்கூறலை நிறைவேற்ற அரசாங்கம் இதுவரை என்ன செய்துள்ளது.
யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்துள்ளதாக அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக இதுவரை ஒரு விசாரணையேனும் முன்னெடுக்கப்பட்டுள்ளதா? சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்க போவதில்லை என அரசாங்கம் கூறுகிறது. ஆனால், உள்ளூர் பொறிமுறையின் கீழும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. இதுவொரு தீவிர பிரச்சினையாகும் என குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் நிறைவடைந்து பத்து வருடம்! இது ஒரு தீவிர பிரச்சினை
Reviewed by Author
on
April 04, 2019
Rating:
Reviewed by Author
on
April 04, 2019
Rating:


No comments:
Post a Comment