மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவு நேரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது-பணிப்பாளர் ரி.ஒஸ்மன் டெனி-
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையின் காரணமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வேலை நாட்களில் வெளி நோயாளர் பிரிவு சேவைகள் அனைத்தும் நேற்று செவ்வாய்க்கிழமை (23) முதல் மறு அறிவித்தல் வரை மாலை 4.30 மணி வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் ரி.ஒஸ்மன் டெனி தெரிவித்துள்ளார்.
இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,,
கடந்த காலங்களில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளி நொயாளர் பிரிவு காலை முதல் இரவு 8 மணி வரை இயங்கி வந்தது.
ஆனால் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ் நிலையின் காரணமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவின் சேவைகள் மாலை 4.30 மணியுடன் மட்டுப் படுத்தப்பட்டுள்ளது.
மாலை 4.30 மணிக்கு பின்னர் வெளி நோயாளர் பிரிவுக்கு வருகின்ற நோயாளர்களின் நோயின் தன்மை கருதி அவர்கள் விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்படும்.
இதனால் ஏற்படுகின்ற இடையூறுகளுக்கு நாம் வருந்துகின்றோம்.என அவர் மேலும் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவு நேரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது-பணிப்பாளர் ரி.ஒஸ்மன் டெனி-
Reviewed by Author
on
April 25, 2019
Rating:
Reviewed by Author
on
April 25, 2019
Rating:


No comments:
Post a Comment