சிறுநீர் கழிக்கும் போது வலியோ எரிச்சலோ ஏற்பட்டால் இதை சாப்பிடுங்க!
சிறுநீர் கழிக்கும் போது உண்டாகும் எரிச்சலுக்கு, சிறுநீர் பாதையில் ஏற்பட்டிருக்கும் தொற்று மட்டுமே காரணமாக இருக்க முடியாது. வேறு சில காரணங்களும் உள்ளன
அதுமட்டுமின்றி உடலில் யூரிக் அமிலம் அதிகரித்தால் அது பல்வேறு உடல் பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகின்றது என்று சொல்லப்படுகின்றது.
இந்த பிரச்சினையிலிருந்து விடுபடவும் ,யூரிக் அமிலம் குறைக்கக்கூடிய உணவுகள் பலவகை உள்ளன. அதில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.

- யூரிக் அமிலம் அதிகமாக இருப்பவர்களுக்கு ஆப்பிள் மிகச் சிறந்த தேர்வாக இருக்கும். ஆப்பிளில் மாலிக் அமிலம் மற்றும் ஃபைபர் இருக்கிறது. இது நம் உடலில் தேவையற்ற யூரிக் அமிலத்தின் அளவைக் குறைத்திடும்.
- யூரிக் அமிலத்தை குறைக்கும் ஒரு நாளைக்கு அரை பவுண்டு அளவு செர்ரீயை நீங்கள் சாப்பிடலாம். இதில் ஆன்தோசியானின் என்ற சத்து இருக்கிறது. இது நம் எலும்புகளில் குறிப்பாக எலும்பு மூட்டுகளில் தங்கியிருக்கக்கூடிய யூரிக் ஆசிட்டை எல்லாம் நீக்கும்.
- அதிக யூரிக் அமிலத்தை குறைக்க ஒரு கிளாஸ் தண்ணீரில் மூன்று ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகரைக் கலந்து குடிக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு இரண்டு முறை வீதம் நீங்கள் குடிக்க வேண்டும்.
- பச்சையான வெங்காயச்சாறு குடித்தால் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
- உடலில் தங்கியிருக்கும் யூரிக் அமிலத்தை குறைக்க வெயில் காலங்களில் அதிகம் கிடைக்கூடிய வெள்ளரியை நீங்கள் அடிக்கடி சாப்பிட வேண்டும்.
- உடலில் யூரிக் அமிலத்தின் உற்பத்தியை குறைக்கும் பீன்ஸை அடிக்கடி உணவுகளில் சேர்த்துக் கொள்ளலாம். பீன்ஸில் இருக்கிற ஃபோலிக் அமிலம் நம் உடலுக்கு மிகவும் நல்லது அதோடு யூரிக் அமிலத்தின் உற்பத்தியையும் குறைக்கிறது.
- காலை எழுந்து சூடான தண்ணீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடிப்பது செரிமானத்திற்கு மட்டுமல்ல உடலில் யூரிக் அமிலம் உற்பத்தியையும் குறைக்க உதவிடுகிறது.
- விட்டமின் சி நிறைந்த பழங்கள் நம் உடலில் யூரிக் அமிலத்தின் அளவு சீரான அளவில் பராமரிக்க உதவிடும். அதோடு யூரிக் அமிலத்தை வெளியேற்றவும் உதவிடும்.
- ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் கொண்டிருக்கும் மீன் வகைகளான சால்மன், மாக்கிரல்,மற்றும் வால்நட்,ஆளி விதைகள் ஆகியவை யூரிக் அமிலத்தை குறைக்க இவற்றையெல்லாம் உங்கள் உணவுப் பட்டியலில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளுங்கள்.
- தினமும் க்ரீன் டி குடிப்பது உடலில் யூரிக் அமிலம் தங்குவது தடுக்கப்படும். இதைத் தவிர செலரி விதைகளையும் நீங்கள் பயன்படுத்தலாம்.
- நார்ச்சத்து அதிகமுள்ள உணவுப் பொருட்கள் செரிமானத்திற்கு உதவுவது மட்டுமின்றி உடலில் அதிகப்படியாக சேர்ந்திருக்கும் யூரிக் அமிலத்தையும் குறைக்க உதவிடும்.
- தக்காளி யூரிக் அமிலத்தை குறைக்கும் குணம் உண்டு. இவற்றில் இயற்கையாகவே அல்கலைன் இருக்கிறது. இவை ரத்தத்தில் யூரிக் அமிலத்தை குறைக்க உதவிடும்.
- அதிகளவு நீராகரங்களை குடித்திடுங்கள். எப்போதும் ஹைட்ரேட்டடாக வைத்திருப்பது உடலில் இருக்கிற செல்கள் எல்லாம் சீராக வேலை செய்ய உதவிடுகிறது.
- யூரிக் அமிலத்தை குறைக்க வாழைப்பழம் தினமும் எடுத்துக் கொள்ளலாம். இதைத் தவிர கொழுப்பு குறைவான உணவுகளையும் நீங்கள் எடுத்துக் கொள்வதால் உங்கள் உடலிலிருந்து யூரிக் அமிலத்தை குறைக்க முடியும்.
- ஆலிவ் ஆயிலில் ஆண்ட்டி இன்ஃப்லமேட்டரி மற்றும் ஆண்ட்டி ஆக்ஸிடேட்டிவ் துகள்கள் நிறையவே இருக்கிறது. இவை உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது உடலில் இருக்கக்கூடிய அதிகளவு யூரிக் அமிலத்தை குறைக்க பெரிதும் உதவிடும்.
சிறுநீர் கழிக்கும் போது வலியோ எரிச்சலோ ஏற்பட்டால் இதை சாப்பிடுங்க!
Reviewed by Author
on
May 06, 2019
Rating:
No comments:
Post a Comment