மன்னாரில் ஈரோஸ் அமைப்பின் அலுவலகம் திறப்பு-
மன்னார் மாவட்டத்தில் மக்கள் செறிந்து வாழும் பகுதியான பேசாலையில்
ஈழப்புரட்சி அமைப்பாகிய 'ஈரோஸ்' என்ற அரசியல் கட்சியானது மீண்டும்
புத்துயிர் பெறும் நோக்குடன் மாவட்டங்கள் தோறும் தனது அலுவலகங்களை
அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இதன் அடிப்படையில் மன்னார் மாவட்டத்தில் பேசாலையில் இன்று ஞாயிற்றுக் கிழமை (26.05.2019) மன்னார் மாவட்டக் கிளைத் தலைவர் ஜே.அமல்ராஜ் குரூஸ் தலைமையில் இவ் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது. இதில் ஈழப்புரட்சி (ஈரோஸ்) அமைப்பின் ஆலோசகரும், நிறைவேற்றுக்குழு உறுப்பினருமான நா.ந.இராசநாயகம், இவ் கட்சியின் இணைச் செயலாளர்களான அ.எ.இராசநாயகம், இரா.இராஐ இராஜேந்திரன், கொள்கைப் பரப்பு செயலாளர் ஜீவன் இராஜேந்திரன் மற்றும் மன்னார் மாவட்டக் கிளை செயலாளர் எஸ்.பாஸ்கரன் குரூஸ் ஆகியோருடன் பலர் இவ் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
1975இல் உருவான ஈரோஸ் அமைப்பானது தற்பொழுதுள்ள காலத்தின் தேவையை உணர்ந்து தமது போராட்ட வடிவங்களை தர்க்க ரீதியாகச் சிந்தித்து அர்ப்ணிப்புடன் திறம்படச் செயற்பட்டாலும் சுமார் 25 வருட காலப் பட்டறிவுடன் 1990 களில் அன்றைய காலத்தின் கட்டாயத்தால் இயக்கம் கலைக்கப்பட வேண்டியதாயிற்று அத்துடன் அமைப்பும் மௌனிக்க வேண்டியதாயிற்று எனவும்,
தற்போதும் காலத்தின் கட்டாயம் நாம் மௌனம் கலைக்க வேண்டியதாயிற்று.
ஈரோஸின் கொள்கை இயக்கப் பண்பாடு அர்ப்ணிப்பு நேர்மை காரணமாக ஈட்டிருந்த நன்மதிப்பை பேரினவாத ஏகாதிபத்திய அரசுகளும் அவர்களுக்கு விலை போனவர்களும் கபடத்தனமாக பயன்படுத்த முயலுகின்றனர்.
அவர்களிடமிருந்து ஈரோஸ் அமைப்பு பாதுகாக்கப்பட வேண்டும். ஈழவர்
விமோசனத்துக்கான தீர்வும் ஈரோஸ் கொள்கை வழியில் கொண்டு செல்லப்பட வேண்டும்.
ஈழவர் இடருக்கான விமோசனமே இலங்கையின் இறைமையை பேணும் தென்கிழக்காசிய பிராந்தியத்திலும் அமைதியைப் பேணும். இதுவே யதார்த்தமுமாகும். இதனை வலியுறுத்தியே நாம் ஈட்டியிருக்கின்ற
நன்மதிப்பிற்கூடாக நம்பிக்கையுடன் அனைவரையும் ஒருங்கிணைக்கும் சக்தியாக எம்மைச் செயற்படுத்த ஈரோஸாகிய நாங்கள் வடக்கு, கிழக்கு, மலையகத்தில் தவிர்க்க முடியாத சக்தியாய் ஒருங்கிணைந்து இவ்வாறான அலுவலகங்களை திறந்து மக்களுக்கு இன ஒற்றுமை மற்றும் வாழ்வாதார வழிகாட்டிகளாக திகழவே அலுவலகங்களையும் திறந்து வைக்கின்றோம் என தெரிவித்துள்ளனர்.

Reviewed by Author
on
May 26, 2019
Rating:

No comments:
Post a Comment