தலைப்பிறை தென்படவில்லை! நோன்பு ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு -
நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை 07-05-2019 முதல் புனித ரமழான் நோன்பை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
கொழும்பு பெரிய பள்ளிவாயலில் மஃரிப் தொழுகையை அடுத்து இன்று ஹிஜ்ரி 1440ஆம் ஆண்டுக்கான புனித ரமழான் தலைப்பிறை பற்றித் தீர்மானிக்கும் மாநாடு ஆரம்பமானது.
இதன்போது, நாட்டின் எப்பகுதியிலும் புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்படவில்லை என கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நாளை மறுதினம் முதல் புனித ரமழான் நோன்பை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த மாநாட்டில் கொழும்பு பெரிய பள்ளிவாயலில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, பெரிய பள்ளிவாயல் நிர்வாகிகள், பிறைக்குழு உறுப்பினர்கள், கதீப்மார்கள், முஅஸ்ஸீன்கள் என பலரும் சமூகமளித்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தலைப்பிறை தென்படவில்லை! நோன்பு ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு -
Reviewed by Author
on
May 06, 2019
Rating:

No comments:
Post a Comment