10,000 இந்திய மாணவர்கள் இந்த ஆண்டு பிரான்சுக்கு செல்ல இருக்கிறார்கள்: பிரான்ஸ் தூதர் -
இந்தியாவுக்கும் பிரான்சுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக இளைய சமுதாயத்தினர் இருப்பதாக தெரிவித்துள்ள இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் Alexandre Ziegler, சுமார் 10,000 இந்திய மாணவர்கள் கல்வி கற்பதற்காக இந்த ஆண்டு பிரான்ஸ் செல்ல இருப்பதாக தெரிவித்தார்.
பிரெஞ்சு தூதரகத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய Ziegler, இதற்கு முந்தைய ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 4,000கும் குறைவாக இருந்ததாகவும், அது இப்போது இரட்டிப்பாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்தியாவில் சுமார் மூன்று ஆண்டுகள் செலவிட்டுள்ள நிலையில், இந்திய இளைஞர்களின் அறிவுத்திறனைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டுப்போனேன் என்றே கூற வேண்டும் என்றார் அவர்.
இந்தியாவுக்கும் பிரான்சுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக இளைய சமுதாயத்தினர் இருப்பதாகவும், சென்ற ஆண்டு இந்தியாவுக்கு வந்திருந்தபோது பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானே அதன் முக்கியத்துவம் குறித்து குறிப்பிட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
10,000 இந்திய மாணவர்கள் இந்த ஆண்டு பிரான்சுக்கு செல்ல இருக்கிறார்கள்: பிரான்ஸ் தூதர் -
Reviewed by Author
on
May 09, 2019
Rating:

No comments:
Post a Comment