உங்க உடம்பில இருக்கும் விஷத்தன்மையை அழிக்க வேண்டுமா?
அதிலிருந்து விடுபடவும் உடலில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றுவதற்கும் சுத்திகரிப்பி முறைக்கு இயற்கை பானங்கள் பெரிதும் உதவி புரிகின்றது.
அந்த வகையில் நச்சுக்களை வெளியேற்ற வெள்ளரிக்காய் மற்றும் எலுமிச்சையால் செய்யப்படும் பானம் உடலுக்கு பலவகையில் நோய்களை விரட்ட துணை புரிகின்றது.
மேலும் இது உடலை தூய்மைப்படுத்தவும் உடலில் நீர்சத்துக்கள் குறையாமல் பார்த்து கொள்கின்றது. தற்போது இந்த பானத்தை எப்படி தயாரிப்பது என்பதை பாரப்போம்.
தேவையான பொருட்கள்
- வெள்ளரிக்காய் - 2
- எலுமிச்சைப்பழம் - 1
- ஐஸ்கட்டிகள் - சில
- புதினா இலைகள்
- தண்ணீர்
செய்முறை
முதலில் வெள்ளரிக்காயை சுத்தமாக கழுவி தோல் சீவிவிட்டு சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். எலுமிச்சையையும் சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.இதனுடன் சில புதினா இலைகளையும் சேர்த்து நீங்கள் தண்ணீர் குடிக்கும் பாட்டிலில் இவை அனைத்தையும் போட்டு விடுங்கள்.
இதில் தண்ணீரை நிரப்பி ஐஸ்கட்டிகள் சேர்த்து ப்ரிட்ஜில் வைத்து விடவும்.
சிறிது நேரம் கழித்து இதனை எடுத்து நன்கு குலுக்கிவிட்டு குடிக்கவும். இதற்கு கண்ணாடி பாட்டில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

நன்மைகள்
- இது உங்கள் வயிறை சுத்தப்படுத்துவதுடன் செரிமான கோளாறுகள் ஏற்படாமல் பாதுகாக்கவும் செய்கிறது.
- இந்த தண்ணீரை குடிப்பது உங்களுக்கு பொலிவான மற்றும் ஆரோக்கியமான சருமத்தை வழங்கும்.
- இது உங்கள் உடலில் இருக்கும் நீர்சத்துக்கள் வெளியேறாமல் நாள் முழுவதும் பாதுகாக்கும்.
- கோடை காலத்தில் எப்போதெல்லாம் சோர்வாக உணர்கிறீர்களோ அப்போதெல்லாம் இதை குடிப்பது இழந்த ஆற்றலை உங்களுக்கு பெற்றுத்தரும்.
- இது உங்கள் உடலில் இருக்கும் நீரின் அளவை சமநிலையில் பராமரித்து கொண்டே இருக்கும்.
- இந்த பானம் உங்களின் வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கக்கூடும்.
- எடை குறைப்பிற்கும் இந்த பானம் மிகவும் உதவியாக இருக்கும்.
- இது உடலில் இருக்கும் தண்ணீரின் அளவை தக்கவைப்பதுடன் உடலில் இருக்கும் நச்சுத்தன்மையையும் கட்டுப்படுத்துகிறது.
உங்க உடம்பில இருக்கும் விஷத்தன்மையை அழிக்க வேண்டுமா?
Reviewed by Author
on
May 09, 2019
Rating:
No comments:
Post a Comment