நியூசிலாந்து செல்ல முற்பட்ட 100க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்களை காணவில்லை!
ANI செய்தி முகமையை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது,
கடந்த ஆறு மாத காலப்பகுதியில் கேரள மாநில கொச்சின் துறைமுகத்திலிருந்து நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற 243 பேர் காணாமல் போயுள்ளனர். இவர்களில் 164 பேர் டெல்லியில் வசிக்கும் இலங்கை தமிழர்களாவர்.
குறித்த அனைவரும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் நியூசிலாந்து நோக்கி சென்றுள்ளனர்.
அங்கு சென்றதும் அழைக்கின்றோம் என்றவர்களை கடந்த ஆறு மாத காலமாக தொடர்புகொள்ள முடியவில்லை என அவர்களின் உறவினர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், குறித்த அனைவர் தொடர்பிலும் தகவல் அறிந்துகொள்ள மத்திய மற்றும் மாநில அரசு உதவி செய்ய வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எவ்வாறாயினும், இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ள கேரள பொலிஸார் 10 பேரை கைது செய்துள்ளதாகவும், மேலும் மூவரை தேடி வருவதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
நியூசிலாந்து செல்ல முற்பட்ட 100க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்களை காணவில்லை!
Reviewed by Author
on
June 25, 2019
Rating:

No comments:
Post a Comment