திருக்கேதீச்சரம் வளைவு உடைப்பு சம்பந்தமான வழக்கு எதிர்வரும் நவம்பர் நான்காம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது
திருக்கேதீச்சர ஆலயம் சார்பில் தோன்றிய ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம் அவர்கள் சமர்ப்பணம் செய்கையில் பொலிஸாரால் மன்றில் தாக்கல் செய்யப்பட்ட ஆரம்ப B அறிக்கையில் எதிரிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள லோறன்ஸ் மற்றும் ஜஸ்ரின் ஆகியோர் இதுவரையில் கைது செய்யப்படவில்லை எனவும் புராதனமான திருக்கேதீச்சர ஆலய வீதியில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவை திருத்தம் செய்யும்போதே எதரிகள் அதனை தகர்தனர் எனவே மீண்டும் அதே இடத்தில் நாம் அலங்கார வளைவை அமைக்க நீதிமன்றம் அனுமதியளிக்க வேண்டும் எனவும் அதற்கு எதிரிகள் தரப்பில் ஆட்சேபனை தெரிவிப்பதானது பாரிய மனித உரிமை மீறலாகும் என சுட்டிக்காட்டினார்.
எதிரிகள் தரப்பில் குறித்த விண்ணப்பத்திற்கு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டபோதும்
உரிய அதிகாரிகளின் அனுமதியைப்பெற்று அலங்கார வளைவை அமைக்க நீதிமன்றம் தடை செய்யாது என கட்டளை வழங்கிய நீதவான் வழக்கை நவம்பர் 4ம் திகதிக்கு தவணையிட்டார்.
திருக்கேதீச்சர ஆலய நிர்வாகத்தினருக்கு எதிரான வழக்கும் அதே தினத்திற்கு தவணையிடப்பட்டது.
வழக்கில் சம்நதப்பட்ட திருக்கேதீஸ்வரம் அனைவரும் எதிராளிகளின் சந்தேக நபர்கள் சார்பில் பங்குத்தந்தை உட்பட பத்துப் பேரும் மன்றில் முன்னிலையாகியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
திருக்கேதீச்சர ஆலயம் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம் ..சிரேஷ்ட சட்டத்தரணி கணேசராஜா மற்றும் சட்டத்தரணிகளான வினோதன், புராதனி, ஜெயகாந்தன்., டினேசன், ராகுல் ஆகியோர் மன்றில் முன்னிலையாகினர்.
எதிராளிகளின் சட்டத்தரணிகளாக ஜனாதிபதி சட்டத்தரணி அரசகுணரெட்ண அன்ரன் புனிதநாயகம் யோன்தாஸ் துஷித் முன்னால் வடக்கு மாகான உறுப்பினரும் சட்டத்திரணியுமான பிரிமுஸ் சிராய்வா முன்னால் வடக்குமாகான அமைச்சர் ப.டெனிஸ்வரன் போன்றோர் முன்னிலையாகியிருந்தார்கள்
திருக்கேதீச்சரம் வளைவு உடைப்பு சம்பந்தமான வழக்கு எதிர்வரும் நவம்பர் நான்காம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது
Reviewed by Admin
on
June 28, 2019
Rating:

No comments:
Post a Comment