இரண்டாம் மொழி வகுப்பு மன்னாரில் ஆரம்பிப்பு-(படம்)
மன்னார் மாவட்டத்தில் பாடசாலை கல்வியை பூர்த்தி செய்த இளையோர் மற்றும் யுவதிகள் , அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களில் கடமை புரியும் அதிகாரிகளுக்கான இரண்டாம் மொழி வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கான ஆரம்ப நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மன்-புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் இடம் பெற்றது.
இந்து பௌத்த கலாச்சார பேரவையின் அணுசரனையில் மன்னார் மாவட்டத்தில் பேசாலை , மன்னார் தீவக பகுதி, அடம்பன் ஆகிய மூன்று பகுதிகளில் குறித்த இரண்டாம் மொழிக் கல்வி வகுப்பானது இடம் பெறவுள்ளது.
குறித்த பயிற்சி நெறியானது ஆறு மாத கால வகுப்புகளாக இடம் பெறுவதுடன் அரச அங்கிகாரம் பெற்ற சான்றிதழும் வழங்கிவைக்கப்படவுள்ளது.
அதே நேரத்தில் விருப்பத்திற்கு ஏற்ப ஆங்கிலம் மற்றும் சிங்கள பயிற்சி நெறிகளை இலவசமாக கற்க கூடிய ஏற்பாடுகள் காணப்படுகின்றமை குறிப்பிடதக்கது.
இரண்டாம் மொழி வகுப்பு மன்னாரில் ஆரம்பிப்பு-(படம்)
Reviewed by Admin
on
June 23, 2019
Rating:

No comments:
Post a Comment