தாங்க முடியாத முழங்கால் வலியா? அப்போ எலுமிச்சையை இப்படி பயன்படுத்துங்க -
பொதுவாக வயதானவர்களுக்கு தான் இம்மாதிரியான பிரச்சினையை வரும்.
ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் குறிப்பாக பெண்கள் தான் இப்பிரச்சனையை சந்திக்கின்றனர்.
இதிலிருந்து இருந்து எளிதில் விடுபட மாத்திரையை விட நமது வீட்டில் இருக்கும் சமையலறையில் உள்ள எலுமிச்சையைக் கொண்டு எளிய வழியில் முழங்கால் மூட்டு வலிகளைச் சரிசெய்யலாம்.
தற்போது அது எப்படி என்பதை இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- எலுமிச்சை - 1-2
- நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
எலுமிச்சையை துண்டுகளாக்கி, காட்டன் துணியில் வைத்து கட்டிக் கொள்ள வேண்டும்.பின் வெதுவெதுப்பான நல்லெண்ணெயில் எலுமிச்சை கட்டிய துணியை நனைத்து, வலியுள்ள இடத்தில் 5-10 நிமிடம் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.
இப்படி தினமும் இரு வேளை செய்து வந்தால், வலி விரைவில் குணமாகும்.
எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் கால்சியம் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களில் இருந்து தடுக்கும் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் உதவி புரிகின்றது.

தாங்க முடியாத முழங்கால் வலியா? அப்போ எலுமிச்சையை இப்படி பயன்படுத்துங்க -
Reviewed by Author
on
June 21, 2019
Rating:

No comments:
Post a Comment