முதல் வெற்றியை பதிவு செய்தது இந்திய அணி -
உலகக்கிண்ணம் தொடரின் 8 வது லீக் போட்டியானது இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே சவுத்தாம்ப்டன் மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சில் திணற ஆரம்பித்ததால், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்கள் மட்டுமே குவித்தனர்.

அந்த அணியில் அதிகபட்சமாக கிறிஸ் மோரிஸ் 42 ரன்கள் எடுத்திருந்தார். இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட்களை வீழ்த்தினார். பும்ரா மற்றும் புவனேஷ்வர்குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 1 விக்கெட்டையும் கைப்பற்றியிருந்தனர்.

இதனையடுத்து 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பத்திலே அதிர்ச்சி காத்திருந்தது. ஷிகார் தவான் 8(12) ரன்களிலும், அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலி 18(34) ரன்களிலும் அவுட்டாகி வெளியேறினர்.

ஆனால் மறுபுறம் நிதானமாக விளையாடி கொண்டிருந்த ரோகித்சர்மாவிற்கு, கே.எல்.ராகுல் ஒத்துழைப்பு கொடுத்தார். அவரும் 26 ரன்களில் வெளியேற, அடுத்த களமிறங்கிய டோனி, சிறப்பானதொரு ஆட்டத்தினை வெளிப்படுத்தி 46 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இதற்கிடையில் ரோகித்சர்மா 128 பந்துகளில் தனது சதத்தை பதிவு செய்தார். ஆட்டத்தின் இறுதியில் ரோகித் சர்மா 122(144) ரன்களும், அதிரடி காட்டிய ஹர்திக் பாண்ட்யா 15(7) ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.
இந்த போட்டியின் மூலம் இந்திய அணி தன்னுடைய முதல் வெற்றியை பதிவு செய்தது. அதேசமயம் தென் ஆப்பிரிக்க அணி தொடர்ந்து 3 வது தோல்வியை தழுவியுள்ளது.
முதல் வெற்றியை பதிவு செய்தது இந்திய அணி -
Reviewed by Author
on
June 06, 2019
Rating:
No comments:
Post a Comment