பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் சந்தர்ப்பவாதி!
பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் யாரோ ஒருவரின் அரசியலுக்கு பின்னால் நின்று அந்த அரசியலை பாதுகாப்பதற்காக தனது சமய நிறுவனத்தின் அடையாளத்தை பயன்படுத்துகின்றார் என்று அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் செயற்பாட்டாளர் அருட்தந்தை மா.சக்திவேல் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்நாடு சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமானது என்று கூறுபவர்களை மல்கம் ரஞ்சித் திருப்திப்படுத்த முனைகிறாா். இந்த நாடு சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமானது என்று அவரும் பல தடவை கூறியுள்ளார். ரத்தின தேரரின் போராட்டம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சார்பானது என்றால் எமது அரசியல் கைதிகள் பல போராட்டங்களை செய்தனர், உண்ணாவிரதம் இருந்தனர், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இரு ஆண்டுகளாக போராடுகிறார் அவர்களுக்கு மத்தியில் சென்று ஒருநாள் அவர் உட்கார்ந்திருந்திந்தராவென கேள்வி எழுப்பியுள்ளார்..
பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் சந்தர்ப்பவாதி!
 
        Reviewed by Author
        on 
        
June 17, 2019
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
June 17, 2019
 
        Rating: 


No comments:
Post a Comment