அண்மைய செய்திகள்

recent
-

எங்களால் முடியும்…சிறுகதை


எங்களால் முடியும்…....................

பாடசாலையில் அங்கும் இங்கும் வெள்ளையும் நீல சீருடைகளில் பரபரப்பாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கின்றார்கள் மாணவர்கள் காரணம் கடைசி நாள் விடுமுறை விடப்போகின்றார்கள். அதேநேரம் தரம் ஐந்துக்கு யார்… போகப்போகின்றார்கள்…. றிப்போட்காட்டினைப்பார்த்தால் தான் தெரியும் வகுப்பாசிரியர் சந்திரன் சொன்னது. இந்த முறை குறையப்புள்ளி எடுக்கும் மாணவர்களை வகுப்பேற்றம் செய்யமாட்டேன.
பெயில் என்றால்….. பெயில் தான் மீண்டும் தரம் நான்கிலே இருக்கவேண்டியதுதான.....இந்தக்கண்டிப்பினால் என்னவோ… எல்லா மாணவர்களும் நன்கு பரீட்சை எழுதியிருந்தார்கள் எல்லா மாணவர்களும் தரம் 5ந்துக்கு சித்தியடைந்து விட்டார்கள். அதிலும் மோகன் சித்தியடையவில்லை அவனுக்கு அந்த விடுமுறை நரகமாகத்தான் இருக்கப்போகின்றது….

மோகன் சினந்துகொண்டான் இந்த றிப்போhட்டினை விடுமுறை முடிந்த பிறகு தந்திருக்கலாம். லூசு சேர்…சந்திரன்
விடுமுறையின் சந்தோஷம் எல்லோர் முகத்திலும்… மாணவர்களுக்கு மட்டுமல்ல ஆசரியர்களுக்கும் தான் வீடு வந்து சேர்ந்ததும் அன்பு தனது புத்தக மூட்டைகளை தூக்கி வீசினான். அன்புவினைப்போலவே அவனது நண்பர்களான சிவஅறிவும் சிவாவும் மதனும் விடுதலை பெற்ற கைதிகள் போல சிறகைவிரித்து பறந்தனர். அவ்வளவு மகிழ்ச்சி ஆம் அது அந்த 30 நாட்கள் தானே அதுவும் பார்த்திருக்க வேகமாய் பறந்து போனது.
மீண்டும் பாடசாலை ஆரம்பமானது. விடுமுறையின் போது இருந்த சந்தோசம் பாடசாலை ஆரம்பமானபோது இல்லைத்தான் இப்படித்தானே மோகனுக்கு அந்த விடுமுறை முழுவதும் இருந்திருக்கும். எல்லா மாணவர்களும் ஒன்று கூடினர் தரம் 05ந்துக்கு மாணவர்கள் இரண்டு பிரிவாக பிரித்தனர் முதலாம் ஆண்டு தொடக்கம் ஒன்றாய் இருந்தவர்கள் 05ம் ஆண்டு சித்தியடைந்த முதல் நாளே பிரிக்கப்பட்டு விட்டனர.; ஏ.பி என்றாலும் வேறு வேறு வகுப்பறை தானே அன்புவும் சிவஅறிவும் ஏ வகுப்பிலும் மதனும் சிவாவும் பி வகுப்பிலுமாய்… பாடசாலை வரும் போதும் இடைவேளையிலும் தான் கண்டு கதைக்கவும் விளையாடவும் முடிந்தது.

ஆசிரியர் சந்திரன் வகுப்பறைக்குள் நுழைந்தார் காலை வணக்கம் சேர் வணக்கம் பிள்ளைகளே…நீங்கள் எல்லோரும் தரம் 05ம் வகுப்பு இனி மிகவும் கடுமையாக படிக்கவேண்டும். புலமைப்பரீட்சையில் சித்திபெறவேண்டும் போனமுறை போல் இந்த முறையும் எங்கட பாடசாலைதான் மாவட்டத்தில்  முதலாம் இடத்தினைப்பெறவேண்டும். போனமுறை படித்த மாணவர்கள் போல் நீங்களும் படிப்பில் கவனமாய் இருந்து சித்தி பெறவேண்டும் ஓம் சேர்….நாம் சித்தி பெறுவோம்.

அன்புவினது பெற்றோர்கள் ஆசிரியர்கள் சிவஅறிவின் பெற்றோர்கள் பணம்படைத்தவர்கள் அதுபோல் மதனின் பெற்றோரும் சிவாவின் பெற்றோரும் தினக்கூலிதான் எவ்வாறு இருப்பினும் நண்பர்கள் நான்கு பேருக்கும் இடையில் நட்பு நன்றாகத்தான் இருந்தது.
அன்புவினை பெற்றோர் சிறப்பு வகுப்புக்கு அனுப்ப சிவஅறிவின் பெற்றோர் வீட்டில் மேலதிக வகுப்பினை ஏற்பாடு செய்தனர் ஆனால் மதனுக்கும் சிவாவுக்கும் பள்ளிப்படிப்புத்தான் பாடசாலை பரீட்சைகளில் மதனும் சிவாவும் நல்ல புள்ளிகளை பெற்று ஆசிரியர்களின் பாராட்டினை பெற அன்புவுக்கும் சிவஅறிவுக்கும் அவர்களது பெற்றோர்கள் ஆசிரியர்கள்  திட்ட ஆரம்பித்தனர்.
முதல் போட்டியாக இருந்த நணபர்களுக்கு இடையில் பொறாமை எண்ணத்தினை விதைத்தனர். பெற்றோர்களும் ஆசிரியர்களும் நல்லாய் இருந்த நண்பர்கள் பாடசலையிலே கீரியும் பாம்புமாய் சண்டையிட்டனர் இச்சண்டையானது விளையாட்டு நாடகப்போட்டிகள் படிப்பு என எல்லாவற்றிலும் புகுந்து விளையாடியது.
தோளில் கைபோட்டு கூடிவிளையாடியவர்கள் இன்று இருபெரும் துருவங்களாக பிரிந்து நின்றனர்….

நாட்கள் நெருங்கிகொண்டிருந்தது விளையாட்டு பொழுதுபோக்கு எதுவுமே இல்லை யாருடனும் பேசவோ… தொலைக்காட்சி பார்க்கவோ…. முடியாது தொடர்ந்து படிப்பு படிப்பு… படிப்பு…அன்புவின் தாய் டேய் இந்த புலமைப்பரீட்சையில் அதிகபுள்ளிகளை பெற்றுக்கொள் அப்படிக்குறைந்;தால் நானும் உனது அப்பாவும் வெளியில தலைகாட்ட முடியாது. அவமானம் தான் பிறகு நாங்கள் ஆசிரியராக இருந்தும் பலனில்லை….
இப்படியான நேரத்தில் தான் மதனின் அப்பா…!!! விபத்தொன்றில் இறந்துவிடுகின்றார். இறப்புவீட்டில் அன்புவும் சிவஅறிவும் சிவாவும் மதனைக்காண்கின்றார்கள் மதன் தந்தையின் அருகில் இருந்து அழுதுகொண்டு இருக்கின்றான். மதனின் தாயார் எனக்கெண்டு இருந்தவரும் போய்ச்சேந்திற்றார் எனி எப்படி என்னால் வாழமுடியும்…? இவன்ர படிப்புக்கு என்ன செய்வன் எல்லாம் போச்சே… போச்சே…. புலம்பிக்கொண்டிக்கின்றார். மதனைக்கண்ட மூவரும் பகைமை பொறாமை மறந்து கட்டித்தழுவினர் டேய் இங்க பாருங்கடா… எங்கட அப்பா…அப்பா…இனி எனக்கு யாருடா இருக்காங்க…? என்ர படிப்பும் சரி புலமைப்பரீட்சையும் சரிடா…எங்கட பாடசாலை இந்த முறையும் முதல் இடத்துக்கு வரணுமடா…நீங்க மூன்று பேரும் விடாதீங்கடா…  நாட்கள் வேகமாக உருண்டோடியது. மதன் பாடசாலையைநிறுத்தி விட்டான் பலசரக்குகடையொன்றில் எடுபிடிவேலைக்கு சேர்க்கப்பட்டான்.

நண்பர்களான அன்பு சிவஅறிவு சிவா மூவருக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை எமது நண்பன் பாடசாலை வர என்ன செய்யலாம்.
முதல் முடிவு எடுத்தனர் தங்களது பெற்றோர்களிடம் பணம் கேட்பது.
அவ்வாறே கேட்டபோது பெற்றோர்கள் பணம் தரமறுத்தனர் இரண்டாம் கட்டமாக ஊண்டியல் ஒன்று செய்வோம் எமது அதிபரிடம் போய் கதைப்போம் அவ்வாறே அதிபர் முன்னிலையில் மூவரும் ஒரு ஊண்டியலுடன்…
அதிபர் இவர்களைக்கண்டது என்ன விடையம்…
அன்பு முதலில் சேர் எங்கள் பாடசாலையில் எத்தனை மாணவர்கள் கல்வி கற்கின்றார்கள்….
1200….மாணவர்கள் ஏன்…?
சிவஅறிவு அடுத்து எத்தனை ஆசிரியர்கள் கற்பிக்கி;னறார்கள் 100…..ஆசிரியர்கள் ஏன்…?
சிவா சேர் எங்களுடைய நண்பன் மதன் பாடசாலை வாறதில்லை நின்டிற்றான் அதுதான்
அதற்கு நீங்கள் என்ன செய்யப்போறிங்க…அவனை மீண்டும் பாடசாலைக்கு கொண்டு வரவேண்டும் புலமைப்பரீட்சை எழுதவைக்கவேண்டும் அதற்குத்தான் இன்னும் மூன்று மாதங்கள் தான் இருக்கு…
அதிபர் மீண்டும்… அதற்கு நீங்கள் மூன்று பேரும் என்ன செய்யப்போறிங்க…?  நாங்க மூன்று பேரும் அவனுக்காக பணம் சேர்க்கப்போறம் அதுதான் உங்களிடம் அனுமதி கேட்க வந்தனாங்கள் ஒருமித்த குரலில் தயங்கியவாறு….
எப்படி சேப்பிங்க….? அதிபர் மெதுவாக…
அதுதான் சேர் எங்களுடைய மாணவர்களும் ஆசிரியர்களும்  எல்லாரும் குறைந்தது ஒரு ரூபா ஒவ்வொரு நாளும் போட்ட காணும் சேர் அவனது குடும்பம் கஸ்ரப்படாது. அவன் பாடசாலைக்கு வருவான் நல்ல வடிவாக புலமைப்பரீட்சை எழுதுவான். எங்களின் பாடசாலை மாகாணத்தில் அல்ல தேசியரீதியில் முதலாம் இடம்பிடிக்கும் சேர்…அதற்கு அவனுக்கு உதவிசெய்யனும்

நீங்கள்தான் அனுமதி தரனும்…அதிபர் வியந்துபோனார்…! இந்த சிறுவயதில் பொதுநலத்துடன் இன்னொருவனுக்காக உதவி செய்ய புறப்பட்டிருக்கும் இந்த சிறுவர்களை குழப்பக்கூடாது. சிறப்பன எண்ணத்தோடு சிறகை விரிக்கும் போது வழிவிடுவோம் என மனதில் எண்ணியவாறு நான் அனுமதி தருகின்றேன். நீங்களும் நன்றாய் படிக்கவேண்டும் சரியா….சரி சேர்.
மீண்டும் பாடசாலையில் கால்பதித்தான் மதன். நண்பர்களின் நட்பூ பூத்தது…. மூன்று மாதங்கள் மூச்சுக்காற்று வேகத்தில் பறந்தது. புலமைப்பரீட்சையும் முடிந்தது. முடிவிற்காய் முழுப்பாடசாலைகளும் மாணவர்களும் ஆசிரியர்களும் காத்திருக்கின்றனர்….ஆம் அந்த முடிவும் வந்தது. மாவட்டத்தில் முதலாம் இடத்தினைப்பெற்றுவந்த பாடசாலை வரலாற்றில் முதல் தடவையாக முதல் நான்கு இடங்களையும் பிடித்துக்கொண்டது.

பாடசாலை விழாக்கோலம் பூண்டது மாண்புமிகு ஜனாதிபதியவர்களும் உயர்கல்வி அமைச்சரும் பாடசாலைக்கு விஜயம் செய்தனர் விழா மேடையில் விழா நாயகர்களான நால்வரையும் மதன்…அன்பு…சிவஅறிவு… சிவா என பெயர் சொல்லி அழைத்தபோது மேடையே அதிர்ந்தது. சிறப்பு தங்கப்பதக்கங்களையும் கேடையங்களையும் ஜனாதிபதியவர்கள் வழங்கிவைத்ததோடு  இவ்வாறான பராயத்தில் தான் இப்படியான உயர்ந்த சிந்தனைகள் பிறக்கின்றன…  இருப்பவர்கள் இல்லாதவர்களோடு பகிர்ந்து கொண்டால் எல்லோரும் இன்பமாய் வாழலாம் இந்த பூமியிலே…

இவ்வாறானவர்களின் கைகளில் எதிர்காலம் எமது நாடு நன்றாய் அமையும் இவ்வுலகை வெல்ல சிறந்த ஆயுதம் கல்விதான் அதை நன்கு புரியவைத்துள்ள இந்த மாணவர்களை நான் மிகவும் பாராட்டுகின்றேன்.
உயர்கல்வி அமைச்சர் மாணவர்களைப்பார்த்து உங்கள் நண்பனை உயர்த்தியதோடு நீங்களும் சாதித்து விட்டீர்கள். ஏனைய மாவட்டங்களில் உள்ள மாணவர்களை என்ன செய்ய….

நான்கு பேரும் ஒருமித்த குரலில் ஒற்றுமையுடன் ஒரே எண்ணத்தோடு எல்லா மாணவர்களும் இணைந்தால் எல்லாம் எங்காளால் முடியும். சேர் அமைச்சரின் முகத்திலும் புன்னகை…
அதிபர் ஆம் பாடசாலை என்பது ஒவ்வொருவரையும் நல்ல பண்புள்ளவனாக… ஆளுமையுள்ளவனாக… போட்டிமிகுந்த இவ்வுலகில் புதிய சாதனைகளை படைப்பதற்கு அன்னையாக அரண் அமைக்கின்றது. இங்கு அன்பு பண்பு பாசம் நல்லொழுக்கம் என்பவற்றை கற்றுக்கொடுக்கின்றது. எதிலும் போட்டியிருக்கலாம் பொறாமை இருக்ககூடாது. அதற்கு எமது பாடசாலையின் இந்த நான்கு மாணவர்களும் நல்ல எடுத்துக்காட்டு என அதிபர் கூற மீண்டும்… மீண்டும்…. மீண்டும்….கரவொலிகள்  நண்பர்கள் கட்டித்தழுவ அவர்களின் பெற்றோர்களின் கண்களில் இருந்து ஆனந்தக்கண்ணீர்….
கலைச்செம்மல்-வை.கஜேந்திரன்-
எங்களால் முடியும்…சிறுகதை Reviewed by Author on June 23, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.