இலங்கையுடனான உறவைப் பலப்படுத்துவதற்கு ஆதரவு! இந்திய வெளிவிவகார அமைச்சர் -
இலங்கையுடனான உறவுகளை பலப்படுத்தும் முயற்சிகளுக்கு ஆதரவு அளிப்பேன் என்று இந்தியாவின் புதிய வெளிவிவகார அமைச்சராக பொறுப்பேற்றுள்ள, சுப்ரமணியம் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சராக பொறுப்பேற்றுள்ள, சுப்ரமணியம் ஜெய்சங்கருக்கு, நிதி அமைச்சர் மங்கள சமரவீர, வாழ்த்து தெரிவித்து, டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
அதற்குப் பதில் பதிவு இட்டுள்ள ஜெய்சங்கர், “உறவுகளைப் பலப்படுத்துவதற்கு எனது ஆதரவையும் எடுத்துக் கொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் வெளியாகிய இந்திய தேர்தல் முடிவுகளின்படி, மோடி தலைமையிலான அரசாங்கம் மீண்டும் வெற்றிவாகை சூடியது. இதன் போது புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
அவர்களின் தமிழகத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர் சும்ரமணியம் வெளிவகார அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் முன்னதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளராக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையுடனான உறவைப் பலப்படுத்துவதற்கு ஆதரவு! இந்திய வெளிவிவகார அமைச்சர் -
Reviewed by Author
on
June 04, 2019
Rating:

No comments:
Post a Comment