பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களை மீண்டும் பதவியேற்குமாறு மகா சங்கத்தினர் கோரிக்கை!
அண்மையில், பதவிலியிருந்து விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் அந்த பொறுப்பினை ஏற்க வேண்டும் என மகா சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கண்டி அஸ்கிரிய மகா விஹாரையில் இன்று மாலை கலந்துரையாடலில் ஈடுபட்ட பௌத்த பீடங்களை சேர்ந்த மகாநாயக்க தேரர்கள், இந்த கோரிக்கையினை விடுத்துள்ளனர்.
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள மல்வத்து பீடத்தின் அனுநாயக்கர் நியங்கொட ஶ்ரீ விஜிதசிறி தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“சிங்களம், தமிழ் , முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்ற ஸ்திரமான தகவலை உறுதிப்படுத்துவதற்கே எதிர்பார்க்கின்றோம்.
அதுவே எமது கோரிக்கையாகும். தற்போதைய அரசாங்கத்தில் இருந்து முஸ்லிம் அமைச்சர்கள் விலகியமை, இடம்பெற்று இருக்கக்கூடாத ஒரு விடயமாகும்.
அதனால் தங்களின் பொறுப்புக்களை ஏற்குமாறு குறித்த தலைவர்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம். அந்த தலைவர்களுடன் கலந்துரையாடுவதற்கான தீர்மானத்தையும் நாம் எடுத்துள்ளோம்.
அத்துடன், குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள பிரமுகர்கள், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் இருப்பின், தாம் சுற்றவாளிகள் என்பதை அரசிற்கும் பாதுகாப்பு பிரிவிற்கும் நிரூபியுங்கள்.
இந்த நிலைமையை நாம் புரிந்து செயற்படாவிடின், வெளியே இருந்து எமது நாட்டிற்கு அழுத்தங்கள் நிச்சயமாக விடுக்கப்படும். எமது நாட்டின் அமைதி சீர்குலைக்கப்பட்டு பாரிய அபாயத்தை நாம் எதிர்நோக்க நேரிடும்.” என குறிப்பிட்டுள்ளார்.
பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களை மீண்டும் பதவியேற்குமாறு மகா சங்கத்தினர் கோரிக்கை!
Reviewed by Author
on
June 06, 2019
Rating:
Reviewed by Author
on
June 06, 2019
Rating:


No comments:
Post a Comment