லண்டனில் வரை சென்றடைந்த புகழ்! 13 வயதில் ஆச்சரியப்படுத்தும் இந்த இந்திய சிறுவன் யார்? -
இந்தியாவை சேர்ந்த 13 வயது சிறுவன் 100 புத்தகங்களுக்கு மேல் எழுதி சாதனை படைத்துள்ள நிலையில் லண்டன் பல்கலைக்கழகம் அவரை கெளரவிக்க முன்வந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மிரிகேந்திர ராஜ் என்ற சிறுவன் ஆஜ் கா அபிமன்யு என்ற புனை பெயரில் புத்தகங்களை எழுதி வருகிறார்.
தனது 6 வயது முதல் புத்தகங்களை எழுதி வருவதாக கூறும் மிரிகேந்திர ராஜ், இதுவரை 135 புத்தகங்கள் எழுதி உள்ளதாகவும் அவை அனைத்தும் 25 முதல் 100 பக்கங்களை கொண்டவை எனவும் கூறியுள்ளார்.
மேலும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யா நாத் உட்பட பல பிரபலங்கள் குறித்து புத்தகங்கள் எழுதி உள்ளதாகவும் அச்சிறுவன் கூறி உள்ளார்.
தற்போது வரை தான் 4 உலக சாதனைகளை புரிந்துள்ளதாகவும், தனக்கு லண்டன் உலக சாதனைகள் பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் தர முன்வந்தது எனவும் மிரிகேந்திர ராஜ் தெரிவித்துள்ளார். வருங்காலத்தில் எழுத்தாளராகி பல புத்தகங்களை எழுதுவதே தனது லட்சியம் என மிரிகேந்திர ராஜ் கூறியுள்ளார்.

லண்டனில் வரை சென்றடைந்த புகழ்! 13 வயதில் ஆச்சரியப்படுத்தும் இந்த இந்திய சிறுவன் யார்? -
Reviewed by Author
on
July 11, 2019
Rating:
No comments:
Post a Comment