மன்னார் திருகேதீஸ்வர வளைவு தொடர்பாக முக்கிய தீர்மானம்....2019
திருக்கேதீச்சர அலங்கார வளைவு 85 அடி தூரத்தில் தான் அமைக்கப்பட வேண்டும் என்று சைவ மக்களுடனான கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்துக்கள் பொது மக்களிடம் கேட்டறியும் கூட்டம் திருக்கேதீச்சர திருப்பணிச்சபை இணைச்செயலாளர் எஸ்.இராம கிருஷ்ணன் தலைமையில் கேதீச்சரத்தின் சம்பந்தர் மடத்தில் இன்று நடைபெற்றது
கடந்த சிவராத்திரி தினத்துக்கு முதல் நாள் திருக்கேதீச்சர ஆலயத்தின் அலங்கார வளைவு கத்தோலிக்க மக்கள் சிலரால் பிடுங்கி எறியப்பட்டது தொடர்பான வழக்கில் இரு தரப்பினரும் பேசி உடன்பாட்டுக்கு வருமாறு நீதி மன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில் இன்றைய கூட்டத்தில் மன்னார் பிரதேச சபை வழங்கிய சந்தியில் இருந்து 85 அடி தூரத்தில் அமைப்பது தான் சிறந்தது. அப்போதுதான் முன்பு போல் கத்தோலிக்க மக்களுக்கும் சைவ மக்களுக்கும் உண்மையான புரிந்துணர்வு நல்லிணக்கம் ஏற்பட்டுள்ளதை நம்ப முடியும் என்று ஒருமித்த குரலாக தெரிவிக்கப்பட்டது.

Reviewed by Author
on
July 28, 2019
Rating:

No comments:
Post a Comment