ராஜீவ்காந்தி கொலை வழக்கு... தமிழர்கள் 7 பேர் aவிடுதலை எப்போது? சட்டப்பேரவையில் முதல்வர் பழனிச்சாமி பதில் -
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 28-ஆம் திகதி முதல் நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஜுலை -ஆம் திகதி முதல் துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினரிடையே காரசார விவாதம் நடைபெற்றது.
அதன் பின் சனி மற்றும் ஞாயிறு என இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பின்னர் இன்று மீண்டும் சட்டப்பேரவை கூடியது.
அப்போது, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்யும் விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமிக்கும், திமுக சார்பில் துரைமுருகனுக்கும் விவாதம் ஏற்பட்டது.
இதில், பேசிய முதல்வர் பழனிசாமி, திமுக ஆட்சியில் நளினியை மட்டும் விடுதலை செய்யலாம் என ஆளுநருக்கு கடிதம் அனுப்பியது. சட்டம் அனைவருக்கும் பொதுவானது.
ஆனால் ஒருவரை மட்டும் விடுதலை செய்யலாம் என்று திமுக தீர்மானம் நிறைவேற்றியது.
அதிமுக ஆட்சியில், எங்கள் அதிகாரத்துக்கு உட்பட்டு, தமிழக அமைச்சரவையைக் கூட்டி தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிவிட்டோம். நாங்கள் என்ன செய்ய முடியுமோ அதை சரியாகச் செய்துவிட்டோம். இனி முடிவெடுப்பது ஆளுநரிடம் என்று கூறினார்.
உடனே துரைமுருகன்,எங்கள் ஆட்சியில் கிடைக்காத வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்துள்ளது என்று கூறம், முதல்வர் பழனிச்சாமி திமுக ஆட்சி காலத்தில் செய்யாததை நாங்கள் செய்துள்ளோம் என்று பதிலளித்தார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கு... தமிழர்கள் 7 பேர் aவிடுதலை எப்போது? சட்டப்பேரவையில் முதல்வர் பழனிச்சாமி பதில் -
Reviewed by Author
on
July 10, 2019
Rating:

No comments:
Post a Comment