இலங்கையில் பிறந்த தந்தை.... தமிழகத்தில் மருத்துவ இடம் மறுக்கப்பட்ட மாணவன்: நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கருப்புசாமி என்ற மாணவர் தொடர்ந்த வழக்கில் மருத்துவக்கல்வி துறையின் முதன்மை செயலாளருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் மருத்துவ சீட் வழங்கவில்லை என்றும், தன் தந்தை இலங்கையில் பிறந்தவர் என்பதால் தன்னை கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கவில்லை என்றும் மாணவர் கருப்பசாமி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இன்று நடைபெற்ற இந்த மனு மீதான விசாரணையின் போது, மாணவரின் பாடசாலை மற்றும் இருப்பிட சான்றிதழ்களை ஆய்வு செய்து உறுதி செய்தபின்,
தமிழக மருத்துவ கல்லூரியில் இடம் வழங்க மருத்துவ கல்வி முதன்மை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
இலங்கையில் பிறந்த தந்தை.... தமிழகத்தில் மருத்துவ இடம் மறுக்கப்பட்ட மாணவன்: நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
Reviewed by Author
on
July 27, 2019
Rating:

No comments:
Post a Comment