மிகப்பெரிய வெற்றி! பிரம்மாண்ட சுவர் எழுப்ப கிடைத்த அனுமதி.. மகிழ்ச்சியில் டிரம்ப் -
பிற நாட்டினர் அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைவதையும், தங்குவதையும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தீவிரமாக எதிர்க்கிறார். குறிப்பாக, மெக்சிகோவின் எல்லை வழியாக சட்டவிரோதமாக நுழைபவர்களை தடுக்க பிரம்மாண்ட எல்லைச்சுவர் கட்ட வேண்டும் என்பது அவரது கனவுத் திட்டமாகும்.
இதனை தனது தேர்தல் வாக்குறுதியின் போதும் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து எல்லைச் சுவரை எழுப்ப நாட்டின் நிதியைப் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்தார். ஆனால், எதிர்க்கட்சியின் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், எல்லைச்சுவரின் ஒரு பகுதியை கட்டி முடிப்பதற்கு ராணுவ நிதியைப் பயன்படுத்த எண்ணிய டிரம்ப், அதற்காக நெருக்கடி நிலையை அமல்படுத்தினார். அதன் பின்னர் கலிபோர்னியா நீதிமன்றம், எல்லைச்சுவர் எழுப்புவதற்கு ராணுவ நிதியைப் பயன்படுத்த தடை விதித்தது.

எனினும் அதனை எதிர்த்து அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணைக்கு பின்னர், சுமார் 2.5 பில்லியன் டொலர் ராணுவ நிதியை எல்லைச்சுவரின் ஒரு பகுதியை கட்டி முடிக்க, உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
இந்த நிதியைக் கொண்டு கலிபோர்னியா, அரிசோனா, நியூமெக்சிகோ மாகாணங்களில் தெற்கு எல்லைச்சுவர் கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு மிகப்பெரிய வெற்றி என ஜனாதிபதி டிரம்ப் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறுகையில், ‘வாவ்... எல்லைச்சுவர் பிரச்சனையில் மிகப்பெரிய வெற்றி. கீழ் நீதிமன்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் மாற்றி விட்டது. தெற்கு எல்லைச்சுவர் கட்ட அனுமதி அளித்துள்ளது. எல்லை பாதுகாப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றி இது’ என தெரிவித்துள்ளார்.
மிகப்பெரிய வெற்றி! பிரம்மாண்ட சுவர் எழுப்ப கிடைத்த அனுமதி.. மகிழ்ச்சியில் டிரம்ப் -
Reviewed by Author
on
July 28, 2019
Rating:
No comments:
Post a Comment