அண்மைய செய்திகள்

recent
-

142 பைகளில் மனித உறுப்புகள்... 10 டன் எடை: அமெரிக்க அதிகாரிகளை மிரளவைத்த சம்பவம் -


அமெரிக்காவில் உடல் உறுப்புகளை தானமாக பெற்று அதை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யும் கும்பல் ஒன்றை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்துள்ள தகவல் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உடல் உறுப்பு தானத்திற்கு கடுமையான வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அமெரிக்காவில் சட்ட விரோதமாக இதில் ஈடுபடுபவர்கள் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.
இருப்பினும் அங்கு சட்டவிரோதமாக உடல் உறுப்புகளை விற்கும் தரகர்கள் ஏராளமாக உள்ளனர். உடல் உறுப்புகளை வர்த்தக முறையில் விற்பது என்பது அமெரிக்காவில் சட்டவிரோத செயலாகும்.
ஆனால் மருத்துவமனைகளுக்கு உடல் உறுப்புகள் தானமாக வழங்கலாம். இப்படி தானமாக வழங்கப்பட்ட உடல் உறுப்புகள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாகக் கடந்த 2013 ஆம் ஆண்டு அரிசோனாவில் உள்ள உயிரியல் வள மையத்தில் (The Biological Resource Centre) எஃப்.பி.ஐ அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
தானமாக பெறப்பட்ட உடல்களை வியாபார ரீதியிலாக விற்பனை செய்யப்பட்டதையடுத்து அந்த மையத்திற்கு 2014 ஆம் ஆண்டு தடை விதித்தனர்.

அமெரிக்கர்கள் மருத்துவத் துறையின் தேவைகளுக்காகத் தங்களது உடலைத் தானமாக கொடுக்கிறார்கள்.
ஆனால், அரசாங்கத்தால் பதிவு செய்யாத சில தரகர்கள் இவர்களது உடலைத் தானமாக பெறுகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பிரபல சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று மேற்கொண்ட ஆய்வில் பல அதிர்ச்சிக்கரமான தகவல் வெளியானது.
உடல் உறுப்புகள் துண்டுதுண்டாக்கி இதயம், கிட்னி, ஆகியவை வியாபாரம் செய்யப்படுவது இதில் அம்பலமானது.
2014 ஆம் ஆண்டு எஃப்.பி.ஐ அதிகாரிகள் அரிசோனா உயிரியல் வள மையத்தில் சோதனைக்கு சென்ற போது மனித உறுப்புகளைக் பக்கெட்டுகளில் கண்டுள்ளனர்.
துண்டிக்கப்பட்ட கால்கள், கைகள், தலைகள் என உடல் உறுப்புகளை கண்டதாக முன்னாள் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆய்வு மேற்கொண்ட சர்வதேச செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியின் படி அங்கு 1,755 மனித உறுப்புகள் 142 பைகளில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் எடை மட்டும் 10 டன் எனக் கூறப்படுகிறது. `அன்று இரவு நான் தூங்கவில்லை அந்த நாளை என்னால் மறக்க முடியாது.
அங்கிருந்த உடல் உறுப்புகள் எல்லாம் ஒவ்வொரு உடலுக்கு மேல் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. ஒரு பெண்ணின் உடலில் ஆண் தலை வைக்கப்பட்டிருந்தது' என முன்னாள் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
உடல் உறுப்புகள் யாருடையது என அடையாளம் காண முடியாத சூழலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிறுவனம் தங்களிடம் தவறான வாக்குறுதிகளை கூறி குடும்ப உறுப்பினர்களின் உடல்களை பெற்றுக்கொண்டதாக 30க்கும் அதிகமானோர் புகார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவங்கள், தற்போதைய வழக்கு மூலம் வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த நிறுவனத்தின் உரிமையாளர், தான் செய்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதையடுத்து ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
142 பைகளில் மனித உறுப்புகள்... 10 டன் எடை: அமெரிக்க அதிகாரிகளை மிரளவைத்த சம்பவம் - Reviewed by Author on July 28, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.