சச்சின் டெண்டுல்கருக்கு லண்டனில் கிடைத்த மிகப் பெரிய கௌரவம்!
கிரிக்கெட்டின் மாஸ்டர் பிளாஸ்டர் என்று அழைப்படுபவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர். சர்வதேச கிரிக்கெட்டில் அதிக போட்டிகள், அதிக சதங்கள், அதிக ஓட்டங்கள் என பல்வேறு சாதனைகளை இவர் படைத்துள்ளார்.
இந்திய அணி கலந்துகொண்ட 6 உலகக் கோப்பை தொடர்களில் இவர் பங்கேற்றுள்ளார். இதுபோன்ற காரணங்களால் கிரிக்கெட் ஜாம்பவானாக இருக்கும் சச்சின் டெண்டுல்கருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உண்டு.
இந்நிலையில், லண்டனில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சச்சின் டெண்டுல்கர் கௌரவிக்கப்பட்டுள்ளார். ஐ.சி.சியின் மிக உயரிய விருதான ‘Hall of Fame' விருது அங்கு அவருக்கு வழங்கப்பட்டது.
ஏற்கனவே, தனது 24 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் சச்சின் டெண்டுல்கர் பல விருதுகளை வாங்கி குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சச்சின் டெண்டுல்கருக்கு லண்டனில் கிடைத்த மிகப் பெரிய கௌரவம்!
Reviewed by Author
on
July 20, 2019
Rating:
No comments:
Post a Comment