லவ்பேட்ஸ்க்கு வைத்த குடிநீரின் மூலம் நுளம்பு உற்பத்திக்கு காரணகத்தாவான பெண்மணிக்கு அபராதம்.
வீட்டில் வளர்க்கும் லவ் பேட்ஸ்க்கு குடிநீர் வைத்து அதை கவனிக்காமல்
நுளம்பு உற்பத்திக்கு காரணகத்தாவாக இருந்த பெண்மணி ஒருவருக்கு ஆயிரம் ரூபா அபராதம் விதித்தது மன்னார் நீதிமன்றம்.
வீட்டில் லவ் பேட்ஸ் வளர்க்கும் கூட்டுக்குள் இருக்கும் பறவைகளுக்கு
குடிநீர் வைத்து அவற்றை கவனிக்காமல் விட்டமையால் அந்த நீரில் நுளம்பு
உற்பத்திக்கு ஏதுவாக இருந்ததாக மன்னார் உப்புக்குளத்தைச் சேர்ந்த பெண்மணி
ஒருவருக்கு எதிராக மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் பொலிசார் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இவ் வழக்கு நேற்று முன்தினம் திங்கள் கிழமை (08.07.2019) மன்னார் மாவட்ட,
நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில்
விசாரனைக்கு எடுக்கப்பட்டபோது அவ் பெண்மணி தனது குற்றத்தை ஏற்றுக்
கொண்டார். இதைத் தொடர்ந்து நீதிபதி அவ் குற்றவாளிக்கு ஆயிரம் ரூபா அபராதம் விதித்தார்.
லவ்பேட்ஸ்க்கு வைத்த குடிநீரின் மூலம் நுளம்பு உற்பத்திக்கு காரணகத்தாவான பெண்மணிக்கு அபராதம்.
Reviewed by Author
on
July 11, 2019
Rating:

No comments:
Post a Comment