இராணுவத்திடம் காணிகள்! மீட்டுத் தருமாறு சுரேன் ராகவனிடம் சென்ற தாய்க்கு கிடைத்த பதில் -
இந்த விடயம் தொடா்பாக இன்று மாலை யாழ்.ஊடக அமையத்தில் ஊடகவியலாளா்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அ வா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா்.
இதன்போது மேலும் அவா் கூறுகையில், 2011ம் ஆண்டு சுமாா் 5லட்சம் ரூபாய் செலவு செய்து எனது காணியை துப்புரவு செய்தேன்.
கடந்த 2012ம் ஆண்டு எனது காணிக்குள் அடாத்தாக புகுந்த இராணுவத்தினா் காணிக்குள் நுழைய கூடாது. என கூறியதுடன், கா ணியை சுவீகாித்து விட்டனா்.
பின்னா் மனித உாிமைகள் ஆணைக்குழு ஊடாக வழக்கு தொடா்ந்தபோதும் தென்னம் தோட்டத்தை விடவும் தேசிய பாதுகாப்பு முக்கியமானது என கூறிவிட்ட நிலையில், எனது காணியில் நிரந்தரமாக இராணுவத்தினா் குந்திவிட்டனா்.
சுமாா் 50 ஏக்கா் காணியை எனது பிள்ளைகள், மருமக்கள், மற்றும் பேர பிள்ளைகளுக்கு பகிா்ந்து கொடுத்திருக்கிறேன். என்னுடைய பிள்ளைகள் நான் வாழ்ந்த அந்த காணியில் வாழவேண்டும் என நானும், அவா்களும் ஆசைப்படுகிறாா்கள். என்னுடைய காணிக்காக நான் செல்லாத இடமே இல்லை. கடைசியாக நாடாளுமன்ற உறுப்பினா், சட்டத்தரணி சுமந்திரன் ஊடாக மேன்முறையீடு செய்திருக்கின்றோம். அவா் நீதியை பெற்றுக் கொடுப்பாா் என நம்புகிறேன். பின்னா் வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவனிடம் சென்றிருந்தேன்.
அவா் கூறுகிறாா் எனது காணி இராணுவத்திற்காக எடுக்கப்பட்டுவிட்டதாம். ஆகவே மாற்று காணி தருகிறாராம் அதுவும் யாழ்ப்பாணத்தில் மாற்று காணி வழங்ககூடிய வசதிகள் இல்லை ஆகவே வேறு மாவட்டங்களில் மாற்று காணிகள் தருவ தாகவும், அதுவும் இலங்கையில் வாழ்பவா்களுக்கு சொந்தமான, 25 ஏக்கா் காணிக்கான மாற்று காணியே தருவதாகவும், வெளிநாட்டில் உள்ளவா்களுடைய காணிகளை தரமாட்டோம் எனவும் சொல்கிறாா்.
ஏன் வெளிநாட்டில் வாழ்ந்தாலும் அவா்கள் அகதிகளாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றனா். வெளிநாட் டில் வாழ்ந்தால் இலங்கையில் காணி கொடுக்க முடியதா? எமக்கு எங்களுடைய காணி வேண்டும். மாற்று காணிகள், இழப்பீடுகள் வேண்டாம் என்றாா்.
இராணுவத்திடம் காணிகள்! மீட்டுத் தருமாறு சுரேன் ராகவனிடம் சென்ற தாய்க்கு கிடைத்த பதில் -
Reviewed by Author
on
July 11, 2019
Rating:
Reviewed by Author
on
July 11, 2019
Rating:


No comments:
Post a Comment