நீறு பூத்த நெருப்பாய் இருக்கும் கலைஞர்களை வெளிக்கொணரவேண்டும் இல்லையேல் உள்ளிருக்கும் நெருப்பு எனும் திறமை சாம்பலாகி விடும் அல்லவா….லா.பாக்கியராசா லெம்பேட்
கலைஞனின் அகம் கணணியில் முகம் விம்பம் பகுதியில்; நாட்டுக்கூத்துக்கலைஞரும் நாடக நெறியாளரும் கலாபூஷண விருதுபெற்ற கலைத்தென்றல் லாசர் ஜேம்ஸ் பாக்கியராசா லெம்பேட் அவர்களின் அகத்திலிருந்து….
தங்களைப்பற்றி-
நான் அக்னேஸ்புரம் வங்காலை மன்னாரில் குடும்பத்தினருடன் சந்தோசமாக கலைச்சமூகப்பணியில் ஈடுபட்டு வருகின்றேன்.
தங்களால் நெறியாள்கை செய்த நாடகங்கள் பற்றி…
- பாஞ்சாலி சபதம்-தென்மோடி நாட்டுக்கூத்து
- இலங்கேசன்- நாடகம்
- பாஞ்சாலி - நாடகம்
- ஈழம் கண்ட சோழன்-அண்ணாவி மரபு நாடகம்
- சங்கிலியன்- நாடகம்
- பாதுகை- நாடகம்
- வாலி வதை- நாடகம்
- தாவீது கோலியாத்- விவிலிய நாடகம்
- கடவுளைக்கண்டேன்- இசை நாடகம்
அத்துடன் பெரிய நாடகமான மரியசித்தாள் வாசாப்பு தென்மோடி சந்தொம்மையார் வாசகப்பா தென்மோடி போன்ற நாடகங்களில் நெறியாள்கை செய்ததன் நடித்தும் உள்ளேன்.
தங்களது முதல் நாடகம் பற்றி---
எனது முதல் நாடகம் என்றால் அது பாஞ்சாலி சபதம் தான் எனது கலையார்வத்திற்கு காரணம் எனது தாயின் தகப்பனார் கலைஞர் அவரின் மகளான எனது தாயின் மூலம் ஆர்வம் ஏற்பட்டது. அதனால் தொடர்ச்சியாக நடித்தேன். பல நாடகங்களை நெறியாள்கை செய்து மேடையேற்றியுள்ளேன்.
தங்களது கலையார்வச்செயற்பாடுகள் பற்றி…
- நாட்டுக்கூத்து கலைஞரான நான்
- நாடக நெறியாள்கை
- நாடக ஒப்பனை
- இசையமைப்பாளர் பக்கவாத்தியம்-இசைவாத்தியங்களான-ஆர்மோனியம் தபேலா-பொங்கஸ்-மேளம்-மிருதங்கம் தபேலா-ஓகன்-வயலின் வாசிக்கும் ஆற்றுல் உண்டு.
- வில்லுப்பாட்டு கதாப்பிரசங்கம் போன்றவை எழுதிக்கொடுத்துள்ளேன்.
நாடகங்கள் நீங்கள் எழுதியுள்ளீர்களா…
நான் பெரிதாக நாடகங்கள் எழுதவில்லை சில நாடகங்கள் தான் எழுதியுள்ளேன் காரணம் நான் பெரிய பொறுப்புக்களாக பக்கவாத்திய கலைஞராகவும் ஒப்பனைக்கலைஞராகவும் நெறியாளராகவும் இருந்ததினால் மற்றவிடையங்களில் கவனம் செலுத்த முடிவதில்லை அத்துடன் ஒப்பனை செய்வதில் அலாதிப்பிரியம் அதனால் நுட்பங்களை பயன்படுத்துவேன் அதைக்கண்ட பெரியவர்கள் என்னை சகலகலாவல்லவன் என பாராட்டுவர்கள் இவை எல்லாம் கடவுள் கொடுத்த வரம்.
நாடகம் அன்றும் இன்றும் எப்படியுள்ளது ...…
அன்றைய நாடகங்கள் ஒரிராக்கதைகள் ஈரிராக்கதைகள் மூவிரவுக்கதைகளாக பெரிய நாடகங்கள் நாட்டுக்கூத்துக்கள் உள்ளன அதுவும் எமது கிராமத்திற்கென தனித்துவமான மரியசித்தாள் வாசகப்பா உள்ளது அத்துடன் அன்று எல்லோரும் பெரும் விருப்பத்துடன் கண்டுகழித்தனர் தற்போது பெரும்பாடு நாடகம் என்றால் கலைஞர்கள் ஆர்வமின்மையே காரணம் தற்போது தொலைக்காட்சி தொலைபேசியும் எமது சமூகத்தினை ஆட்கொண்டுள்ளது. இதை உடைக்க எண்ணி நான் பெரிய நாடகங்களை சிறிய நாடகங்களாக குறுநாடகம் மற்றும் ஓரங்க நாடகம் மாற்றி 15 முதல் 1மணித்தியாளத்திற்கு சுருக்கி மேடையேற்றினேன். நான் எதிர்பார்த்தது போல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. எனக்கு மகிழ்ச்சியாகவும் இருந்தது.
நாடக அரங்கேற்றத்தில் மறக்கமுடியாத விடையம் பற்றி…
நான் பெரும்பாலும் வில்லன் பாத்திரம் தான் எற்பேன் சோகமான பாத்திரங்கள் ஏற்பதில்லை
- பாஞ்சாலி சபதம் நாடகத்தில்-நான் சகுனி
- ஈழம் கண்ட சோழன் நாடகத்தில் நான் துட்டகைமுணு
துட்டகைமணு எல்லாளனை வெற்றி கொள்கின்றான் எல்லாளன் இறக்கின்றான் …
துட்டகைமுணு மனசாட்சி அசிரியாக பேசுவது போல வீரன் மாவீரன் நல்லவன் நல்லவனாகவே இறந்திருக்கின்றான் எல்லாளன் அவனுக்கு நானே முதலில் அஞ்சலி செலுத்துவேன் இனி இவ்வழியே வரும் எல்லோரும் அஞ்சலி செலுத்தவேண்டும்..
வீரமன்னன் எல்லாளன் புகழ் வாழ்க வாழ்க
மன்னன் துட்டகைமுணு புகழ் வாழ்க வாழ்கவே என இரண்டு மன்னர்களையும் நல்லவர்களாக காட்டினேன் எல்லோரும் என்னை பாராட்டினார்கள் மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்றது அகில இலங்கை ரீதியில் மேடையேற்றப்பட்டது மகிழ்ச்சியே…
கலைஞர்களுக்குரிய கௌரவம் பற்றி…
இக்கருத்தை நான் ஏற்றுக்கொள்கின்றேன். ஆனால் கலைஞர்கள் கௌரவத்தில் நேர்மை தன்மை இருக்கின்றதா… என்றால் அது கேள்விக்குறியாகத்தான் உள்ளது.
கலைஞர்கள் கலைஞர்களாகவே தான் இருக்கின்றார்கள் கலையானது இறைவனால் கொடுக்கப்படும் பெரும் வரம் அது எல்லாருக்கும் கிட்டுவதில்லை கலை என்நால் அது இனிக்குமாக புளிக்குமா… என கேட்கும் மனிதர்களும் எம்மத்தியில் உள்ளனர். கலைஞன் காலத்தோடு வாழ்பவன்….
தங்களின் சேவைகளுக்கு பாராட்டி கௌரவித்த விருதுகள் பற்றி-
- இந்தியா இராமநாதபுரமாவட்டம் அறிவொளி இயக்கம் இசைக்கலைஞராக பணியாற்றியமைக்காக சான்றிதழ்-1992-1993
- வடக்கு-கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சினால் கூத்துப்பயிற்சிப்பட்டறை சான்றிதல் 18-20-07-2001
- 15-10-2010 மரிய சித்தாள் வாசாப்பு நாடக நெறியாள்கை செய்தமைக்காக பாராட்டுச்சான்றிதழ் பெற்றுக்கொண்டேன்.
- 2012ம் ஆண்டு புனித ஆனாள் கலை மன்றத்தினால் கலைத்தென்றல் விருதும் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
- கலாபூஷண விருது 15-09-2012 கலாசரா அமைச்சினால் கலைச்சேவைக்காக வழங்கப்பட்டது.
தங்களின் நீண்ட நாள் ஆசை பற்றி…
எனது நீண்ட நாள் ஆசை என்றால் நாட்டுக்கூத்துக்கலைஞர்கள் விரும்புவது போல எமது கலையை அழிய விடமால் எமது இளம்தலைமுறையினர் கையில் கொடுத்துவிட்டுப்போக வேண்டும் அவர்கள் மனங்களின் எமது பாரம்பரியங்களை காக்க வேண்டும் என்ற செய்தியை புகுத்த வேண்டும்.அப்படிச்செய்தால் எமது கலை என்றும் மங்கி மறைந்துவிடாது நீண்ட காலம் வாழும் அதற்கு எமது இளம்தலைமுறை தயாராக இருக்க வேண்டும் கலையால் உலகை ஆளவேண்டும் எமது இளையதலைமுறையினர்…அதுவே எனது பெருவிருப்பு.
இளைஞர் யுவதிகளுக்கான தங்களது அறிவுரை---
பழையன கழிதலும் புதியன புகுதலும் எனும் பொருளுக்கு ஏற்ப எமது பாரம்பரியங்களை கழித்து நவீனத்தினை புகுத்தியவர்களாகவே இருக்கினர் எமது இளம்தலைமுறை…
எமது பாரம்பரியங்களை பாதுகாக்கவேண்டிய பாரிய பொறுப்பு இளைஞர்களின் கையில்தான் உள்ளது. எமது கிராமத்தின் பழமையானதும் பாரம்பரியமானதுமான பெரிய நாடகம் மரிய சித்தாள் வாசாப்பு மேடையேற்றி வருகின்றோம். அதை தொடர்ச்சியாக செயலாற்ற எமது இளைஞர்களால்தான் முடியும் அவர்களுக்கு உறுதுணையாக நாம் இருப்போம் இந்த நவீனத்தில் நாம் எமது கலைகலாச்சாரபண்பாட்டினை இழந்துவிடக்கூடாது. கல்வெட்டுக்களின் காணப்படும் எமது அன்றைய பாரம்பரியம் இனிவரும் காலங்களிலும் அடுத்த தலைமுறை அறியும் வண்ணம் இருக்க
வேண்டும்.
தங்களின் கலைவாழ்வில் மறக்க முடியாத மனிதர்கள் என்றால்…
பலர் உள்ளனர் முதலில் எனது இறைவனுக்கும் எனது பெற்றோருக்கும் எனது குடும்பத்தினருக்கும் அத்துடன் கலைஞானக பிறந்தேன் ஒய்வுபெற்ற அதிபர் சவிரியான் லெம்பேட் அவர்களால் வளர்ந்தேன் மக்சிமஸ் லெம்பேட் அவர்களினால் வெளியில் தெரிந்தேன் எலிசி லெம்பேட் இவர்கள் மூவரையும் என்னால் என்றும் மறக்கவே முடியாது. பசுமையாக நினைவுகள்…
மன்னார் மண்ணின் பெருமையை வெளிப்படுத்தும்
நியூமன்னார் இணையம் பற்றி…
நான் எனது இத்தனை வருட கலைச்சேவையினை செய்துள்ளேன் ஆனாலும் என்னை யாரும் செவ்வி கண்டதில்லை முதல் தடவையாக நியூமன்னார் இணையத்தில் இருந்து வை.கஜேந்திரனாகிய நீங்கள் செவ்வி கண்டுள்ளீர்கள். நல்லதொரு செயலாகும். எனது குடும்பமும் நானும் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம்.
நீறு பூத்த நெருப்பாய் இருக்கும் எம்மைப்போன்ற கலைஞர்களையும்; இன்னும் மறைவாகவே இருக்கின்றார்கள் அவர்களையும் வெளிக்கொணரவேண்டும் இல்லையேல் உள்ளிருக்கும் நெருப்பு எனும் திறமை சாம்பலாகி விடும் அல்லவா எம்மைபற்றி முழுமையாக அறிந்து தெரிந்து வெளிப்படுத்தும் வழியாக உள்ளது
என்னை வெளிப்படுத்திய நியூமன்னார் இணையக்குழுமத்திற்கும் உங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும் என்றும்....
நியூமன்னார் இணையத்திற்காக சந்திப்பு-
கவிஞர் வை.கஜேந்திரன்-BA
நீறு பூத்த நெருப்பாய் இருக்கும் கலைஞர்களை வெளிக்கொணரவேண்டும் இல்லையேல் உள்ளிருக்கும் நெருப்பு எனும் திறமை சாம்பலாகி விடும் அல்லவா….லா.பாக்கியராசா லெம்பேட்
Reviewed by Author
on
July 06, 2019
Rating:

No comments:
Post a Comment