சஜித் பிரேமதாசா அவர்களால் திறந்து வைக்கப்பட்ட குறிஞ்சி நகர் வீதி பெயர்ப்பலகை விஷமிகளால்.......
சஜித் பிரேமதாசா அவர்களால் திறந்து வைக்கப்பட்ட குறிஞ்சி நகர் வீதி பெயர்ப்பலகை விஷமிகளால் பிடுங்கி எறியப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட அதிகாரிகள் முருங்கன் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர்
பெயர்ப்பலகை சேதமாக்கப்பட்ட சம்பவமானது மாதிரி கிராமம் திறந்த மறுநாள் கடந்த இரண்டாம் திகதி இரவு நடந்திருக்கலாம் என்று வீடமைப்பு அதிகார சபையின் பணியாளர்களும் அதிகாரிகளும் தெரிவிக்கின்றனர்
மன்னார் நானாட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட மடுக்கரையில் குறிஞ்சி நகர் என்னும் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் 211 மாதிரிக்கிராமத்தினை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்கள் திறந்து வைத்திருந்தார்.
ஆனால் நானாட்டான் முங்கன் பிரதான வீதியிலிருந்து குறித்த குறிஞ்சி நகர் கிராமத்திற்கு செல்லும் சந்தியில் நிர்மாணிக்கப்பட்டிருந்த குறிஞ்சி நகர் என்னும் சீமெந்தினால் உருவாக்கப்பட்ட பெயர்ப்பலகையானது முற்றாக சேதமாக்கப்பட்டு பிடுங்கி எறியப்பட்டிருந்தது
குறிஞ்சி நகர் பெயர்ப்பலகை சேதமாக்கப்பட்டு பிடுங்கி எறியப்பட்டது பற்றி தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அதிகாரிகள் கருத்து தெரிவிக்கும் போது
இந்த நாட்டில் முக்கியத்துவத்திற்கும் கௌரவத்திற்கும் உரித்தான அமைச்சர் ஏழை மக்கள் கௌரவமாக வாழ வேண்டும் என்று பெருந்தொகையான பணங்களை செலவழித்து கிராமங்களை உருவாக்கி ஒவ்வொரு மக்களும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று நினைக்கிறார் அவரால் உருவாக்கப்பட்ட கிராமத்தின் பெயரைத்தாங்கிய பெயர்ப்பலகையை உடைத்து சேதமாக்குவது அமைச்சரை அவமதித்ததிற்கு சமன் இது சம்பந்தமாக பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளோம் அத்துடன் மீண்டும் அவ்விடத்தில் பெயர்ப்பலகை வைப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்
குறிஞ்சி நகர் பெயர்ப்பலகை சேதமாக்கப்பட்ட சந்தியானது முன்னர் நானாட்டான் பிரதேச சபையின் பிரதான அலுவலகம் இருந்து தற்போது பிரதேச சபையின் ஆயுள்வேத மருந்தகம் அமைந்திருக்கும் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

Reviewed by Author
on
July 06, 2019
Rating:

No comments:
Post a Comment