கோத்தபாய நாட்டின் ஜனாதிபதியாக தெரிவாக மாட்டார்: சிவசக்தி ஆனந்தன் -
ராஜபக்ச குடும்பத்துடன் சம்பந்தப்பட்ட எந்த நபர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டாலும் அவர் சிங்கள பௌத்த பின்னணியின் அடிப்படையிலேயே செயற்படுவார் என்பதால், அவருக்கு வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ், முஸ்லிம் மக்களின் பெரும்பாலானோரின் நம்பிக்கையை வென்றெடுக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளை பெறாமல், எந்த வேட்பாளரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற முடியாது. இதனால், கோத்தபாய ராஜபக்ச எப்போதும் இந்த நாட்டின் ஜனாதிபதியாக தெரிவாக முடியாது.
அவர் ஜனாதிபதியாக தெரிவானாலும் அவரிடம் இருந்து தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை எதிர்பார்க்க முடியாது. இதனால், அவருக்கு தமிழ் மக்களின் வாக்குகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை தனக்கு இல்லை எனவும் சிவசக்தி ஆனந்தன் குறிப்பிட்டுள்ளார்.
கோத்தபாய நாட்டின் ஜனாதிபதியாக தெரிவாக மாட்டார்: சிவசக்தி ஆனந்தன் -
Reviewed by Author
on
August 13, 2019
Rating:

No comments:
Post a Comment