அரசியல் சமூக காரணங்களினால் வடமாகாணம் இன்று வீழ்ந்துபோயுள்ளன! சுரேன் ராகவன் -
தமிழ் நாகரிகம் கல்வியை சார்ந்த நாகரிகமாகும். கல்வியிலே முதலிடம் பெற்ற மாகாணம் வடமாகாணம். ஆனால் அரசியல் சமூக காரணங்களினால் இன்று வீழ்ந்துபோயுள்ளோம் என ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
அருள் கல்வி வட்டம் நடாத்தும் 2019 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப்பரீட்சை மாணவர்களுக்கான இலவசக் கருத்தரங்கு ஆளுநர் தலைமையில், யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று ஆரம்பமாகியுள்ளது.
இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் நாகரிகம் கல்வியை சார்ந்த நாகரிகமாகும். கல்வியிலே முதலிடம் பெற்ற மாகாணம் வடமாகாணம்.
வடமாகாணத்தை மீள கட்டியெழுப்ப எனக்கு முன்னால் இருக்கும் சவால்களை எதிர்கொண்டு எல்லா முயற்சிகளும் எடுப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.
சட்டத்தரணி வே.தேவசேனாதிபதி அனுசரணையில் நடைபெறும் இந்த கருத்தரங்கு எதிர்வரும் 16ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அரசியல் சமூக காரணங்களினால் வடமாகாணம் இன்று வீழ்ந்துபோயுள்ளன! சுரேன் ராகவன் -
Reviewed by Author
on
August 08, 2019
Rating:

No comments:
Post a Comment