அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையில் உணவு பொருட்களை பதப்படுத்தல் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல் -


இலங்கையில் தற்போது உணவுப் பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் போர்மலின் சடலங்களை நறுமணமூட்டி(எம்பமிற்காக) வைத்திருப்பதற்காக மாத்திரமே பயன்படுத்தப்படும். ஆனால் தற்போது அது உணவுப் பொருட்களை நீண்டகாலம் வைத்திருப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றமை கவலைக்குரிய விடயம் என இராஜாங்க அமைச்சர் புத்திக பத்திரண தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இலங்கையில் உணவு பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் போர்மலின் தொடர்பில் தாம் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த அரசாங்கத்தின் வர்த்தக கூட்டுத்தாபனத்தினால் இதனை இறக்குமதி செய்வதற்கான அதிகாரம் பெற்றுக்கொள்ளப்பட்டது.

அதற்கு முன்னர் அவ்வாறான நிலை இருக்கவில்லை, இந்த போர்மலின் சடலங்களை நறுமணமூட்டி வைத்திருப்பதற்காக மாத்திரமே பயன்படுத்தப்படும் ஆனால் உணவுப்பொருட்களை நீண்டகாலம் பதப்படுத்தி வைத்திருப்பதற்காகவும், நீண்ட பாவனைக்காகவும் தற்பொழுது பயன்படுத்தப்படுவது கவலைக்குரிய விடயம்.
இதனால் நாட்டில் உள்ள மலர்சாலைகளை பதிவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த மலர் சாலைகளின் எண்ணிக்கைக்கு அமைவாக இந்த போர்மலினை வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த ஒழுங்கு விதிகளுக்கு அப்பால் சடலங்களை நறுமணமூட்டி பாதுகாப்பதற்காக பயன்படுத்தப்படும் போர்மலின் விநியோகிக்கப்படுமாயின் விநியோகிப்பவர்களுக்கு எதிராக நுகர்வோர் அதிகார சபை சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் உணவு பொருட்களை பதப்படுத்தல் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல் - Reviewed by Author on August 02, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.