மன்னார்-இலுப்பைக்கடவை பகுதியில் ஒருவர் தாக்கப்பட்டு பணம் பறிக்கப்பட்டதாக புகார்.
மன்னார் இலுப்பைக்கடவை பொலிஸ் நிலைய பிரிவில் இரவு வேளையில் JCBவாகன உரிமையாளர் ஒருவரை தாக்கி பணத்தை பறித்துச் சென்றதுடன்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட இவ் நபரை ஒரு குழுவினர் இரவு வேளையில் எச்சரித்துச் சென்றதாகவும் பொலிசில் முறையீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
இவ் சம்பவம் நேற்றைய தினம் ஞாயிறு இரவு (04.08.2019) சவுரிக்குளம்
பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மல்லாவியைச் சேர்ந்த நபர் பாலச்சந்திரன் சஜந்தன் (வயது 37) என்பவரே
தாக்குதலுக்கு உள்ளாகி பள்ளமடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ் சம்பவம்பற்றி தெரியவருவதாவது மல்லாவியைச் சேர்ந்த பாலச்சந்திரன்
சஜந்தன் என்பவர் இரண்டு மாதங்களாக சவுரிக்குளம் பகுதியில் தனது JCB
என்ற இயந்திரத்தைக் கொண்டு தொழில் புரிந்து வருவதாக
தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் அன்று இவ் நபர் தனது தொழில் ஸ்தாபனத்திலிருந்து மோட்டர்
பைக்கிளில் இரவு 9.30 மணியளவில் வெளியில் வந்தபொழுது ஒருவர் இவரை
இடைமறித்து பொல்லால் தாக்கியதுடன் இவரிடமிருந்த ரூபா ஒரு இலட்த்தையும் அபகரித்துச் சென்றதுடன் இவரின் தொலைபேசியையும் சேதப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ் சம்பவம் வேளையில் தாக்குதலோடு சம்பந்தப்பட்ட ஒரு சிலர் சம்பவ
இடத்திலிருந்து சற்று தூரம் நிற்பதையும் இவரால் காணக்கூடியதாக
இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தலையில் தாக்கப்பட்ட நிலையில் இவரை பள்ளமடு வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நேரத்திலும் மூவர் இரவு 12.30 மணியளவில் வைத்தியசாலைக்கு வந்து நண்பர்கள்போல் நடித்து இவரை எச்சரித்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் இவர் வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளையில் இவருடைய JCB யின் கண்ணாடிகளுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இவ் சம்பவம் தொடர்பாக இலுப்பைக்கடவை பொலிசார் விசாரனைகள மேற்கொண்டு வருகின்றனர்.

Reviewed by Author
on
August 06, 2019
Rating:

No comments:
Post a Comment