சிறுநீரகம், நுரையீரல் மற்றும் கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தனுமா?
அந்தவகையில் கரட் கொண்டு தயாரிக்கப்படும் ஜூஸ்கள் உடலுக்கு நல்ல வலிமையை தருகின்றது.
சிறுநீரகம், நுரையீரல் மற்றும் கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இந்த ஜூஸ் குடிப்பதால் வைட்டமின் A, B1, B12, B2, B3, B6, C, D மற்றும் E கிடைக்கின்றது.
அந்தவகையில் தற்போது இந்த ஜூஸை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- கேரட் - 1
- ஆரஞ்சு - 1
- வாழைப்பழம் - 1
- பால் - 120 மி.லி
செய்முறை
வாழைப்பழம் மற்றும் ஆரஞ்சு பழத்தின் தோலை நீக்கிவிடுங்கள்.ஆரஞ்சு, கேரட், வாழைப்பழத்தை துண்டு, துண்டாக வெட்டுக் கொள்ளுங்கள்.
மிக்ஸரில் கொஞ்சம், கொஞ்சமாக நறுக்கிய பழத் துண்டுகளை அரைக்கவும்.
கடைசியாக பாலை இதனுடன் சேர்த்து நன்கு கலக்கி குடியுங்கள்.

முக்கிய நன்மைகள்!
கண்களின் ஆரோக்கியத்தை வலுவாக்கும். எலும்புகளின் வலிமைக்கு உதவும்.நுரையீரல், கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும்.
பருக்கள் உண்டாகாமல் தடுக்கும். வாயுத்தொல்லை உண்டாகாமல் இருக்க பயனளிக்கும். கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும். அல்சர் மற்றும் கட்டிகள் உண்டாகாமல் இருக்க உதவும்.
செரிமானத்தை ஊக்குவிக்கும். உடல் எடை குறைக்க உதவும்.
குறிப்பு!
தேவை என்றால் இந்த ஜூஸுடன் புதினா இலைகளை சேர்த்துக் கொள்ளலாம்.
சிறுநீரகம், நுரையீரல் மற்றும் கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தனுமா?
Reviewed by Author
on
August 01, 2019
Rating:
No comments:
Post a Comment