ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு யாருக்கு? கூறுகிறார் த.தே.கூட்டமைப்பின் தலைவர் -
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் இன்று திருகோணமலை நகராட்சி மன்ற கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.
இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,
கடந்த அரசாங்கத்தின் போது பல்வேறு ஏற்பாடுகளை நாங்கள் செய்து வந்திருக்கின்றோம்.
காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினை, காணிப் பிரச்சினை மற்றும் அரசியல் கைதிகள் தொடர்பிலும் நாங்கள் பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து கொண்டே செல்கின்றோம்.
மக்கள் எம்மைப்பற்றி குறைவாக எப்படிப் பேசினாலும் பரவாயில்லை. நாங்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள்.
மக்களுக்கு சேவை வழங்கக்கூடியவர்கள். அதனால் எம்மை நம்பி வாக்களித்த மக்களுக்கு நாங்கள் எப்போதும் நன்றிக்கடன் உள்ளவர்களாகவே இருப்போம்.
அத்துடன் கடந்த காலங்களில் எமக்கு நீங்கள் எவ்வாறு ஆதரித்தீர்களோ அதேபோன்று தொடர்ந்தும் எமக்கு ஆதரவு வழங்குவீர்கள் என நம்புகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த கூட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, செயலாளர் கே.துரைராஜசிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர்களான கே.துரைரட்ணசிங்கம், சுமந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு யாருக்கு? கூறுகிறார் த.தே.கூட்டமைப்பின் தலைவர் -
Reviewed by Author
on
August 05, 2019
Rating:

No comments:
Post a Comment