இலங்கை விரைகிறது ஐரோப்பிய ஒன்றியக்குழு! -
இலங்கையில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கண்காணிப்பு பயணம் ஒன்றை ஐரோப்பிய ஒன்றியக்குழு இந்த வாரத்தில் மேற்கொள்கிறது.
நாளை முதல் 13ஆம் திகதிவரை இந்த பயணம் இடம்பெறுகிறது.
ஒன்றியத்தின் தலைமையகமான பிரசல்ஸில் இருந்து இந்தக்குழு இலங்கைக்கு வருகிறது. இந்தக்குழு தேர்தல் கண்காணிப்பு பணிகள் தொடர்பில் இலங்கையின் அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளது.
இலங்கைக்கு வரும் குழுவில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இரண்டு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத்துறை உட்பட்ட மூன்று சுயாதீன நிபுணர்கள் உள்ளடங்குகின்றனர். இந்த பயணம் பெரும்பாலும் உண்மையை கண்டறியும் பயணமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை விரைகிறது ஐரோப்பிய ஒன்றியக்குழு! -
Reviewed by Author
on
August 05, 2019
Rating:

No comments:
Post a Comment