தமிழர்களின் உரிமைகளை தோற்கடித்து மார்தட்டிக்கொள்ளும் சர்வதேச குற்றவாளி கோத்தபாய!
சர்வதேச குற்றவாளியாக கருதப்படும் கோத்தபாய ராஜபக்ஷ தமிழ் மக்களின் உரிமைப் போராட்டங்களை தோற்கடித்துவிட்டதாக மார்தட்டிக்கொள்ளும் பல கொலைகளுக்கு காரணமான ஒருவர் என நவ சம-சமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தால், நாடு ஒரு இருண்ட யுகத்திற்குள் தள்ளப்படும்.
எமது நாடு தற்போது பாரிய இன்னல்களுக்கு முகம்கொடுத்துள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இனவாத, மதவாத, பேரினவாத சக்திகள் ஒன்றிணைந்து, அதில் வெற்றிபெற்று தொடர்ந்து தமது இடை நிறுத்தப்பட்ட பயணத்தை மேற்கொள்ள தயாராகி வருகின்றனர்.
ஜனநாயகம், சுதந்திரம், நீதிக் கட்டமைப்பு, மற்றும் தமது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக கூறினார்கள். ஆனால் அவ்வாறு வந்த நல்லாட்சி அரசாங்கமும் அதன் பிரதானியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், தொடர்ந்து அந்த அபிலாஷைகளை மூழ்கடிக்கும் வகையிலேயே செயற்பட்டு வந்தார்கள்.
அந்த பின்னணியில்தான் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட மற்றைய அனைவரும் உள்நுழைந்தார்கள். எனவே உறுதியளிக்கப்பட்ட பல வேலைத்திட்டங்கள் பின்தள்ளப்பட்டன. வேறு சில கைவிடப்பட்டுள்ளன. இந்தநிலையில் மீண்டும் இவர்களுக்கு இனவாத, மதவாத பேரினவாத ஆட்சியை ஸ்தாபிக்க சந்தர்ப்பம் கிடைக்குமானால் இங்கு பாரிய வீழ்ச்சி ஏற்படும்.
எனவே, ஜனாதிபதி தேர்தலில் ரணில் வந்தாலும் வேறொருவர் வந்தாலும் ஒன்றிணைந்த கூட்டணி சார்பில் ஒருவர் வந்தாலும் இனவாத, மதவாத பேரினவாத தரப்பினர் கோத்தபாயவையே களமிறக்கியிருக்கிறார்கள்.
கோத்தபாய என்பவர் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டங்களை முறியடித்து, பல படுகொலைகளை மேற்கொண்டதாக மார்தட்டிக்கொள்பவர் மட்டுமல்லாது, நாட்டில் வேறு பல கொலைச் சம்பவங்களுக்கும் மூலகாரணமாக இருந்துள்ளார்.
எனவே, எமது நவ சம சமாஜ கட்சி சார்பில் அனைத்து நலன் விரும்பிகளிடமும் நாங்கள் கேட்டுக்கொள்வது. அனைவரும் ஒன்றிணைந்து போராடினால் எமது பொது எதிரியை தோற்கடிக்க வேண்டும் என்பதாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் உரிமைகளை தோற்கடித்து மார்தட்டிக்கொள்ளும் சர்வதேச குற்றவாளி கோத்தபாய!
Reviewed by Author
on
September 03, 2019
Rating:

No comments:
Post a Comment