மன்னாரில் 'சிறகுநுனி குறுந் திரைப்பட விழா'-அனுமதி இலவசம்
நாடளாவிய ரீதியில் சமூகங்களிடையே நல்லிணக்கத்துக்கும் சகவாழ்வுக்குமான பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்து வரும் 'சிறகுநுனி கலை ஊடக மையம்' மன்னாரில் குறுந் திரைப்பட விழாவொன்றை ஏற்பாடு செய்து வருகிறது.
துறைசார் வளவாளர்களின் நெறிப்படுத்தலில் தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ/ கத்தோலிக்க சமூகங்களைச் சேர்ந்த இளந்தலைமுறையினரை இணைத்து சிறகுநுனி உருவாக்கிய 6 புதிய குறுந் திரைப்படங்கள் இவ்விழாவில் காண்பிக்கப்பவுள்ளன. இவற்றில் லண்டன் விம்பம் சர்வதேச குறுந்திரைப்பட விழாவில் இவ்வாண்டுக்கான 'சிறந்த குறுந் திரைப்படம்' 'சிறந்த நடிகை' ஆகிய விருதுகளைப் பெற்ற 'அபாயா', 'சிறந்த இயக்குநர்' விருதைப் பெற்ற 'ஃபேக் ஐடி பார்த்துக் கொண்டிருக்கிறான்' ஆகிய குறுந் திரைப்படங்களும் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதுவரை 5 திரைப்பட விழாக்களில் பங்கேற்றுள்ள இக் குறுந் திரைப்படங்கள் மன்னாரில் திரையிடப்படுவது இதுவே முதன்முறையாகும்.
எதிர்வரும் செப்டம்பர் 26 வியாழன் காலை 9.00 மணிக்கு மன்னார் நகர சபை மண்டபத்தில் இக் குறுந் திரைப்பட விழா நடைபெறவுள்ளது. முற்றிலும் இலவசமான இந்நிகழ்வில் குறுந் திரைப்படங்கள் பற்றிய பார்வையாளர் கருத்துப் பரிமாறும் இடம்பெறவுள்ளது.
தொடர்புகளுக்கு: 077 2384762

Reviewed by Author
on
September 21, 2019
Rating:
Reviewed by Author
on
September 21, 2019
Rating:

No comments:
Post a Comment