முசலி கொண்டச்சி முஸ்லீம் மகா வித்தியாலய கணனிகூடம் காதர் மஸ்தான் எம்.பியால் திறந்து வைப்பு-படங்கள்
முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கொண்டச்சி முஸ்லீம் மகா வித்தியாலய பாடசாலையில் அமைக்க்பட்ட கனணிகூடம் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் நேற்று திங்கட்கிழமை02/09/2019 மாலை வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் ஒதுக்கிய சுமார் 2 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட குறித்த கனணிக்கூடம் இன்று வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டு மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.
பாடசாலையின் அதிபர் முகமட் கமால் லாபீர் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் மாணவர்கள் , ஆசிரியர்கள் ,பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் உற்பட ஆதரவாளர்கள் என பலர் கல்ந்து கொண்டனர்.
குறித்த பாடசாலையில் அவரது நிதி ஒதுக்கீட்டில் பல்வேறு அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முசலி கொண்டச்சி முஸ்லீம் மகா வித்தியாலய கணனிகூடம் காதர் மஸ்தான் எம்.பியால் திறந்து வைப்பு-படங்கள்
Reviewed by Author
on
September 03, 2019
Rating:

No comments:
Post a Comment