போலியான புள்ளிவிபரங்களை வெளியிடும் இராணுவம்! சிறிதரன்MP வெளியிட்ட தகவல் -
கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று ஆளுநரின் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் இராணுத்தினரின் மோசமான புள்ளிவிபரத்தின் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அதிருப்தியில் அமைதியாக இருந்தார்.
அப்போது பாராளுமன்றிலும் ஜனாதிபதி தலைமையிலும் மக்களின் காணிகள் தொடர்பான கூட்டங்களில் கலந்துகொண்டு இராணுவத்தினருக்கு எதிராக கடுமையாக சண்டையிடும் நாடாளுமன்ற உறுப்பினர் இன்று அமைதியாக இருக்கிறார் என கூறி ஆளுநர் காரணத்தை கேட்டபோது,
இராணுவத்தினர் இங்கு தவறான புள்ளிவிவரங்களை காட்டுகின்றார்கள். தங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் விபரமாக குறிப்பிட்டுள்ளேன்.
கிளிநொச்சி நகரின் 40 வீதமான காணிகள் இராணுவத்தினரின் வசம். எமது பிரதேச சபைக்கு சொந்தமான நூலகத்தில் இராணுவம், இலங்கையில் எந்தவொரு மாவட்டத்திலும் இல்லாத வகையில் மாவட்ட செயலக வளாகத்திற்குள் இராணுவம் தன்னுடைய முகாமை வைத்திருக்கிறது.
எங்களின் விவசாய காணிகள், பண்ணைகள் போன்றவற்றினை இராணுவம் கையகப்படுத்தி வைத்திருந்து அவர்கள் விவசாயம் செய்கிறார்கள். இவற்றை எல்லாம் செய்து கொண்டு தவறான புள்ளிவிவரங்களை கூறிக்கொண்டு இருக்கிறார்கள் என்று சிறிதரன் தனது விசனத்தை வெளியிட்டார்.
குறித்த கூட்டம் மாகாண ஆளுனரின் தலைமையில் நடைபெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, சிறீதரன், ஆளுநரின் செயலாளர், பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள், ஜனாதிபதி செயலக அதிகாரிகள், வனவளப்பாதுகாப்பு பிரிவு, தொல்லியல் திணைக்களங்களின் பணிப்பாளர்கள், கிளிநொச்சி மாவட்ட முப்படையினர் பொலிசார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
போலியான புள்ளிவிபரங்களை வெளியிடும் இராணுவம்! சிறிதரன்MP வெளியிட்ட தகவல் -
Reviewed by Author
on
September 13, 2019
Rating:

No comments:
Post a Comment