கேரளாவில் இரண்டு நாட்களில் மிகப்பெரும் வசூல் செய்த காப்பான்,
கே.வி ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்த காப்பான் சூர்யா ரசிகர்களால் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. காப்பான் தமிழில் நல்ல வரவேற்பை பெற்று உள்ள நிலையில் தெலுங்கில் அதிக வரவேற்பை பெறவில்லை.
ஆனால் கேரளாவில் காப்பான் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது, படம் வெளியாகிய 2 நாட்களில் ரூ 3.5 கோடி வசூலை எட்டியுள்ளது.
சூர்யாவிற்கு கேரளாவில் முந்திய படங்களில் இல்லாத வரவேற்பு காப்பான் படம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது . இதை பார்க்கும் போது விஜய்க்கு நிகராக சூர்யா கேரளாவில் மீண்டும் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
மேலும், இன்றும் படத்திற்கு அங்கு நல்ல வரவேற்பு இருப்பதால், எப்படியும் ரூ 5 கோடி வரை கேரளாவில் நாளைக்குள் வரும் என தெரிகின்றது.
இப்படத்தை கேரளாவில் ரூ 2.5 கோடிக்கு வாங்கியதாக கூறப்படுகின்றது, அப்படியிருக்க இன்னும் இரண்டே நாட்களில் காப்பான் லாபத்தை எட்டும் என்று கூறப்படுகின்றது.
கேரளாவில் இரண்டு நாட்களில் மிகப்பெரும் வசூல் செய்த காப்பான்,
Reviewed by Author
on
September 23, 2019
Rating:

No comments:
Post a Comment