வில்பத்து பகுதியில் இராணுவத்தினரால் மரங்கள் நாட்டி வைப்பு-படம்
மன்னார் தள்ளாடி 54 ஆவது படைப் பிரிவு இராணுவத்தினரின் ஏற்பாட்டில் திங்கட்கிழமை 02-09-2019 மாலை முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட வில்பத்து மற்றும் அதனை அண்டிய காட்டுப் பகுதிகளில் மரங்கள் நடும் நிகழ்வு இடம் பெற்றது.
வில்பத்து வனப்பகுதிகளில் சுமார் 2100.ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை ஈடு செய்யும் வகையில் குறித்த பகுதியில் மரங்களை நாட்டி வைக்கும் திட்டம் குறித்து இராணுவ படைத்தளத்தின் பிரிகேடியர் இந்திரஜித் பண்டார தலைமையில் இராணுவத்தினர் இணைந்து வில்பத்தை அண்டிய கல்லாறு வனப்பகுதியில் மரங்களை வைபவ ரீதியாக நாட்டி வைத்தனர்.
'தேசிய வியத் பவறே' நிறுவனத்தின் அனுசரனையுடன் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த நிறுவனத்தின் அதிகாரிகள்,இராணுவ அதிகாரிகள், மதத்தலைவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
வில்பத்து பகுதியில் இராணுவத்தினரால் மரங்கள் நாட்டி வைப்பு-படம்
Reviewed by Author
on
September 03, 2019
Rating:

No comments:
Post a Comment