39 புலம்பெயர்ந்தோரின் உயிர் பலியின் பின்னணியில் வட அயர்லாந்து கடத்தல் கும்பல்?: பொலிசார் ரெய்டு நடவடிக்கை!
வட அயர்லாந்திலுள்ள Co Armagh என்ற பகுதியில் அமைந்துள்ள Laurelvale மற்றும் Markethill என்னும் இடங்களில் அமைந்துள்ள இரண்டு வீடுகளில் பொலிசார் ரெய்டுக்காக நுழையும் படங்கள் வெளியாகியுள்ளன.
அதிகாரிகள், தற்போது, பல்கேரிய நகரமான Varna என்ற நகரத்துடன் தொடர்புடைய அயர்லாந்து கடத்தல் கும்பல் ஒன்றை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள்.
காரணம், பிடிபட்ட லொறி வட அயர்லாந்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதன் பின்னால் இணைக்கப்பட்டிருந்த குளிர் பதனம் செய்யப்பட்ட அந்த கண்டெய்னர் பல்கேரிய நகரமான Varnaவில் பதிவு செய்யப்பட்டுள்ளதுதான்.

அந்த கண்டெய்னர் பெல்ஜியத்திலுள்ள Zeebrugge என்ற இடத்திலிருந்து உள்ளூர் நேரப்படி சுமார் 12.30 மணியளவில் எசெக்சிலுள்ள Purfleetஐ வந்தடைந்ததாகவும், அந்த லொறி வட அயர்லாந்திலிருந்து வந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன், குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், அந்த கண்டெய்னரை பல்கேரியாவில் பதிவு செய்தது ஒரு அயர்லாந்து பெண்.
இன்னொரு பக்கம், அந்த லொறியின் ஓட்டுநரான வட அயர்லாந்தைச் சேர்ந்த Mo Robinson (25) கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவரே பொலிசாருக்கு கடத்தல் குறித்து தகவலளித்திருக்கலாம் என்றும், ஆனால், அந்த லொறியில் தான் கடத்துவது மனிதர்களை என்று அவருக்கு தெரியாமல்கூட இருந்திருக்கலாம் என்றும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
39 புலம்பெயர்ந்தோரின் உயிர் பலியின் பின்னணியில் வட அயர்லாந்து கடத்தல் கும்பல்?: பொலிசார் ரெய்டு நடவடிக்கை!
Reviewed by Author
on
October 24, 2019
Rating:
No comments:
Post a Comment