ஐக்கிய தேசியக்கட்சி தமிழ்,முஸ்ஸீம் மக்களுக்கு வேறு பாடுகள் இல்லாமல் உழைத்த ஒரு கட்சி-மன்னாரில் ரி.எம்.சுவாமிநாதன்MP.
.
கட்சி வேறுபாடுகள் இருந்தும் இந்த ஜனாதிபதி தேர்தலிலே நாங்கள் எல்லோறும் சேர்ந்து அன்னச்சின்னத்திற்கு வாக்களித்து சஜித் பிரேமதாச அவர்களை இந்த நாட்டின் தலைவராக நியமிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சரும், பாரளுமன்ற உறுப்பினருமான ரி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் அப்துல் சமீயூ முஹம்மது பஸ்மி தலைமையில் ஐக்கிய தேசியக்கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் சஜித் பிரேமதாசவை ஆதரித்து முதலாவது விசேட கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை20/10/2019மதியம் இடம் பெற்றது.
இதன் போது கலந்து கொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் ரி.எம்.சுவாமிநாதன் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,,,
மக்கள் இன,மத பேதமின்றி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜீத் பிரேமதாசவிற்கு வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
-ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பாக எங்களுடைய வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களை முன்னிலையில் வைத்து நாங்கள் எல்லோறும் சேர்ந்து அவருடைய வெற்றிக்கு ஒரு சின்னமாக செய்ய வேண்டிய கடமைகளை செய்ய வேண்டும் என்பது தான் எனது முக்கியமான கருத்து.
பொதுவாக கூறி இருக்கின்றோம் வீடு வீடாக சென்று சஜித் பிரேமதாச அவர்களை ஆதரித்து இத்தேர்தலிலே வெற்றி பெற வைக்க வேண்டும்.
-எனவே சிங்களவர்கள்,முஸ்ஸீம்கள்,கிறிஸ்தவர்கள்,இந்துக்கள் என்ற வேறு பாடுகள் இன்றி எல்லோறும் சேர்ந்து அவரை வெற்றி அடையச் செய்ய வேண்டும்.
-இந்த நாட்டின் முக்கியத்துவம் என்ன என்றால் சஜித் பிரேமதாச அவர்கள் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பாகத்தான் போட்டியிடுகின்றார்.
ஐக்கிய தேசியக்கட்சி தமிழ் மக்களுக்கும் முஸ்ஸீம் மக்களுக்கும் வேறு பாடுகள் இல்லாமல் உழைத்த ஒரு கட்சி என்பதை நீங்கள் அறிவீர்கள்.
-எத்தனையோ வருடங்களாக இருக்கின்ற இக்கட்சியின் முதன்மையை டீ.எஸ்.செனாநாயக்க அவர்களின் காலத்தில் இருந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையின் படி எத்தனையோ தலைமையின் படி இந்த வேளைகள் இடம் பெற்று வருகின்றது.
எனவே கட்சி வேறுபாடுகள் இருந்தும் இந்த ஜனாதிபதி தேர்தலிலே நாங்கள் எல்லோறும் சேர்ந்து அன்னச்சின்னத்திற்கு வாக்களித்து சஜித் பிரேமதாச அவர்களை இந்த நாட்டின் தலைவராக நியமிக்க வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கை.
அதனடிப்படையிலே மன்னாரில் இந்த கூட்டம் இடம் பெற்றுள்ளது.என தெரிவித்தார்.
-இதன் போது சஜித் பிரேமதாச அவர்கள் ஜனாதிபதியாக வந்தால் அரசியல் கைதிகளை விடுதலை செய்வாரா?அல்லது அவர்களின் விடுதலை தொடர்பில் என்ன நடவடிக்கைகளை மேற்கொள்வார் என ஊடகவியலாளர் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினர் ரி.எம்.சுவாமிநாதனிடம் கேள்வி எழுப்பினார்.
-அதற்கு அவர் பதில் வழங்குகையில்,,
-சட்ட ரீதியான நடவடிக்கைகள் உள்ளது.குறித்த கேள்வியை நீங்கள் சஜித் பிரேமதாசவிடமே கேட்க வேண்டும்.இந்த கேள்விக்கு பதில் சொல்ல எனக்கு தகுதி இல்லை.அவர் கலந்து கொள்ளும் பிரச்சார கூட்டத்தில் நேரடியாக அவரிடம் கேட்கலாம்.இவர் பதில் வழங்குவார் என அவர் தெரிவித்தார்.
-குறித்த கூட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சியின் வன்னி மாவட்ட முகாமையாளர் ஜே.பி.கொஸ்தா , அமைச்சர் றிஸாட் பதியுதீனின் பிரத்தியேக செயலாளர் றிப்கான் பதியுதின் உற்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டதோடு,சஜித் பிரேமதாசவை ஆதரித்து துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வை முன்னாள் அமைச்சர் ரி.எம்.சுவாமிநாதன் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.

Reviewed by Author
on
October 21, 2019
Rating:

No comments:
Post a Comment