யாழ்ப்பாணம் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியில் இடம்பெற்ற 'வனக்கதை' நூல் வெளியீடு-படங்கள்
சமூகப் பொறுப்புமிக்கவர்களான சாரணர்களை இணைத்த சாரணர் நிகழ்ச்சியும், 'The jungle story' நூலின் தமிழாக்கமான 'வனக்கதை' நூலின் வெளியீட்டு விழாவும் ஈழத்தின் யாழ்ப்பாணத்தின் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியில் இடம்பெற்றது. 19.10.2019 சனிக்கிழமை காலை 09.00 மணி முதலாக சாரணர் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. பிற்பகல் 02.00 மணிக்கு 'வனக்கதை' நூலின் வெளியீட்டு விழா ஆரம்பமானது.
நூள் வெளியீட்டு நிகழ்வுக்கு காங்கேசன்துறை சாரணர் மாவட்ட ஆணையாளர் செ.ஜெயபவான் தலைமை வகித்தார். பிரதம விருந்தினராக இலங்கை சாரணர் சங்கத்தின் தலைமைக் காரியாலய ஆணையாளர் ந.செளந்தரராஜன் பங்கேற்றார்.
நிகழ்ச்சிகளை த.சுபராம் தொகுத்தளித்தார். அகவணக்கம், தமிழ்மொழி வாழ்த்து என்பவற்றைத் தொடர்ந்து ஆசியுரைகளை பிரம்மஸ்ரீ ச.சதானந்தக் குருக்கள், அருட்பணி இ.இராஜேஸ்வரன் அடிகளார் ஆகியோர் அளித்தனர். வரவேற்புரையினை கனகரத்தினம் வழங்கினார். தலைமையுரையினைத் தொடர்ந்து வெளியீட்டுரையினை ந.செளந்தரராஜன் ஆற்றினார். நூலினை மாவட்ட சாரண ஆணையாளர் செ.ஜெயபவான் வெளியிட்டு வைக்க, முதற்பிரதியினை கனடா தேசத்தில் சாரணப் பணிகளை முன்னெடுக்கும் இரவீந்திரன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து நிகழ்வில் பங்கேற்றோர் பிரதி பெற்றனர்.
நூலாய்வுரையினை யோ.புரட்சி ஆற்றினார். தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி, பொருளாதார மேம்பாட்டிற்கான அறம் அமைப்பினர் சரோஜினி கனகரத்தினம் அவர்களுக்கு நினைவுச்சின்னம் வழங்கி கெளரவித்தனர். மனிதவுரிமைகள் செயற்பாட்டாளரும், தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் பழைய மாணவியுமான வற்சலா துரைசிங்கம், கனடா இ.சரோஜினி ஆகியோர் இக்கெளரவிப்பினை அளித்தனர்.
தொடர்ந்து சாரணர் நிகழ்ச்சிகளில் வெற்றியீட்டியோருக்கான பரிசளிப்பு, தங்கத்தாரகை விருதளிப்பு ஆகியன இடம்பெற்றன. ஏற்புரையினை 'வனக்கதை' நூலின் தமிழ் மொழிபெயர்ப்பாளர் சரோஜினி கனகரத்தினம் வழங்கினார்.
ருத்யாட் கிப்ளிங் அவர்களால் எழுதப்பட்ட 'The jungle story' எனும் பிரபல நூலே 'வனக்கதை' எனும் பெயரில் வெளியாகியுள்ளது.

Reviewed by Author
on
October 20, 2019
Rating:

No comments:
Post a Comment