சினிமாவில் 60 ஆண்டுகள் நிறைவு...கமல்ஹாசனுக்கு சிவாஜி கணேசன் இல்லத்தில் அறுசுவை விருந்து!
1960ம் ஆண்டு வெளியான களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் அறிமுகமான நடிகர் கமல்ஹாசன் திரைத்துறையில் தனது 60 ஆண்டு கால பயணத்தை நிறைவு செய்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், சென்னை தி.நகரில் உள்ள சிவாஜிகணேசன் இல்லத்திற்கு கமல்ஹாசன் சென்றுள்ளார். அங்கு நடிகர் பிரபு சார்பில் கமல்ஹாசனுக்கு மதிய விருந்து அளிக்கப்பட்டு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
அதன்பின்னர் பிரபு குடும்பத்தாருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை டிவிட்டரில் பதிவிட்ட கமல்ஹாசன், அன்னை இல்லத்தில் அறுசுவை விருந்தும், வழக்கம் போல் நிறைய அன்பும் பரிமாறப்பட்டது என்றும், பிரபு வாசித்து அளித்த மடலின் வாசகங்கள் கண்கலங்க வைத்தன என்றும் பதிவிட்டுள்ளார்.

சினிமாவில் 60 ஆண்டுகள் நிறைவு...கமல்ஹாசனுக்கு சிவாஜி கணேசன் இல்லத்தில் அறுசுவை விருந்து!
Reviewed by Author
on
October 20, 2019
Rating:

No comments:
Post a Comment